பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் இன்று(வெள்ளிக்கிழமை) ராஜ்ய சபா உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி இருவரும் இரகசியமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு ஸ்மிருதி இரானி, வெங்கையா நாயுடுவின் பாதங்களைத் தொட்டு வணகினார்.
அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி இருவரும் இந்த மாதா தொடக்கத்தில் குஜராத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அதே நேரத்தில் ஸ்மிருதி இரானிக்கு இது இரண்டாவது முறையாகும்.