உயிரை காப்பாற்றிய வீரர்களுக்கு, கேரள பெண்களின் வித்தியாசமான நன்றி!

கேரள வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை, தங்கள் உயிரை  பணையம் வைத்து காப்பாற்றிய இந்திய கடற்படை வீரர்களுக்கு கொச்சி மக்கள் வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2018, 12:21 PM IST
உயிரை காப்பாற்றிய வீரர்களுக்கு, கேரள பெண்களின் வித்தியாசமான நன்றி! title=

கேரள வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை, தங்கள் உயிரை  பணையம் வைத்து காப்பாற்றிய இந்திய கடற்படை வீரர்களுக்கு கொச்சி மக்கள் வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளனர்!

கேரள மாநிலத்தில் பெய்த மழையால் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு கண்டுள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்துள்ள கேரள மாநிலத்தில், இதுவரை 370 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 8.5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தற்போது மாநிலத்தில் தேங்கியிருந்து நீரின் அளவு குறைந்து வருகின்றது, எனினும் வெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்டெடுக்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 17-ஆம் நாள் கொச்சியில், வெள்ளத்தால் சிக்கிய இரண்டு பெண்களை ஹெலிகாப்டர் உதவியுடன் கமான்டர் விஜய் வர்மா மீட்டார். இந்நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மீட்கப்பட்ட பெண்மனிகளின் வீட்டின் மாடியில் THANKS(நன்றி) என எழுதப்பட்டுள்ளது.

முப்படை வீரர்களின் உதவியுடன் கேரள மக்கள் மீட்கப்பட்ட வருவதால் வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக நேற்றைய தினம் கேரளா மாநிலம் கிழக்கு காடங்களூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த குடும்பத்தினரை இந்திய கடற்படை வீரர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News