கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பீகார், அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கம் பயமுறுத்துகின்றன. இந்த மாநிலங்களில் 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை முதல் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட நிர்வாகம் மேட்டூர் அணையின் நீர் பரவும் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது!
சிவசேனா கட்சியின் MLA, MP-க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்குவர் என அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தக்காரே தெரிவித்துள்ளார்!
கேரள வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை, தங்கள் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய இந்திய கடற்படை வீரர்களுக்கு கொச்சி மக்கள் வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளனர்!
கேரளாவில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணத்தால் கொச்சியில் மெட்ரோ சேவை, விமான சேவை, ரயில் சேவை, பேருந்து சேவை என அனைத்தும் முடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.