திருப்பதியில் V.I.P தரிசனம் ரத்து!!

கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது..!

Last Updated : Apr 20, 2018, 03:45 PM IST
திருப்பதியில் V.I.P தரிசனம் ரத்து!! title=

கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் உலகம் உலகம் முழுவதிலும் இருந்து  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாகவும், விசேஷ நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாலும், திருப்பதி வரும் பக்தர்கள் பட்டிகளில் அடைக்கப்பட்டு பின்னர் குழு குழுவாக தரிசணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். 

இந்நிலையில், திருப்பதியில் வி.ஐ.பி தரிசனமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்தானது ஏப்ரல் 21-ம் தேதி (நாளை) துவங்கி வருகின்ற ஜூலை 16-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதை தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் வாடகை அறை, விரைவு தரிசனம் டிக்கெட் முன்பதிவு மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அடையாள அட்டையானது கட்டயமக்கபட்டுள்ள நிலையில் வி.ஐ.பி தரிசனமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறை என்பதால் தற்போது பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. எனவே, திருப்பதியில் கோடை விடுமுறையை தொடர்ந்து வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு வி.ஐ.பி-க்களின் தரிசனம் ரத்து செய்யபடுகிறது. 

இநிலையில், ஏப்ரல் 21-ம் தேதி (நாளை) துவங்கி வருகின்ற ஜூலை 16-ம் தேதி வரை சிபாரிசு கடுதங்கள் ஏற்கபடமாட்டது எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Trending News