கொரோனாவில் தொடங்கிய 2020.. பிரளயத்தில் முடியுமா.. பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்..!!!

2020 ஆம் ஆண்டில், கொரோனா பரவல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் நெருக்கடியையும் பிரச்சனையையும் சந்தித்து வருகின்றனர். கொரோனாவின் காரணமாக உலகம் பல ஆண்டுகள் பின்னால் சென்றுவிட்டது என்று சொல்லலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2020, 05:32 PM IST
  • இந்தியாவின் கிரீடம் என்று அழைக்கப்படும் இமயமலை, வடக்கிலிருந்து வரும் குளிர் காற்றிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், எதிரிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் அரணாக உள்ளது.
  • இமயமலைப் பகுதியில் விரைவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற ஆய்வறிக்கை மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
கொரோனாவில் தொடங்கிய 2020.. பிரளயத்தில் முடியுமா.. பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்..!!! title=

2020 ஆம் ஆண்டில், கொரோனா பரவல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் நெருக்கடியையும் பிரச்சனையையும் சந்தித்து வருகின்றனர். கொரோனாவின் காரணமாக உலகம் பல ஆண்டுகள் பின்னால் சென்றுவிட்டது என்று சொல்லலாம்.   

மக்கள் இந்த ஆண்டை ஒரு மோசமான ஆண்டு இருக்க முடியாது என்று கூறி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி சீர்குலைந்துள்ளது, தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் ஸ்தம்பித்துள்ளன. பலர் வேலை இழந்துவிட்டார்கள். ஆனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என விஞ்ஞானிகள் பீதியை கிளப்பியுள்ளனர்.

ஒரு சமீபத்திய ஆய்வில், விரைவில் இந்தியாவின்  இமயமலைப் பகுதி முழுவதிலும் பயங்கர நில நடுக்கம் ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் (India) கிரீடம் என்று அழைக்கப்படும் இமயமலை, வடக்கிலிருந்து வரும் குளிர் காற்றிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், எதிரிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் அரணாக உள்ளது.  அப்படிப்பட்ட இமயமலைப் பகுதியில் விரைவில் நிலநடுக்கம் ஏற்படாலம் என்ற ஆய்வறிக்கை மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

பயங்கர நிலநடுக்கங்களை (Earthquake) முன் கூட்டியே அறிவிக்கும் ரேடியோகார்பன் பகுப்பாய்வைத் தொடர்ந்து, நில அதிர்வு ஆராய்ச்சி அமைப்பு, பாறை மேற்பரப்புகளையும் மண்ணையும் வைத்து ஆய்வு நடத்துகிறது. புவியியல், வரலாற்று மற்றும் புவி இயற்பியல் தரவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் இதைக் கூறியுள்ளனர்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் ஸ்டீவன் ஜி. வோஸ்னோஸ்கி, இமாச்சலப் பகுதி  இந்தியாவின் கிழக்கில் இருந்து மற்றும் பாகிஸ்தான் மேற்கு பகுதி வரை பரவியுள்ளது, கடந்த காலத்தில், இந்த பகுதி பல பெரிய பூகம்பங்களின் மையமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதுபோன்ற பேரழிவு பூகம்பம் ஏற்பட்டால், இந்தியாவில் சண்டிகர் மற்றும் டெஹ்ராடூன் மற்றும் நேபாளத்தின் (Nepal) காத்மாண்டு போன்ற பெரிய நகரங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

ALSO READ | அதிகம் இல்லை... வெறும் 86 ரூபாய்க்கு வீடு வாங்கலாம்.. எங்கே தெரியுமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News