புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகள்; தியேட்டர்கள் மற்றும் பார்களுக்கு அனுமதி

புதுச்சேரி அரசு, கூடுதல் தளர்வுகளை அறிவித்து,  ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 15 வரை நீட்டித்துள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2021, 10:38 AM IST
புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகள்; தியேட்டர்கள் மற்றும் பார்களுக்கு அனுமதி

 

புதுச்சேரி அரசு, கூடுதல் தளர்வுகளை அறிவித்து,  ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 15 வரை நீட்டித்துள்ளது. கூடுதல் தளர்வில், தியேட்டர்கள் இரவு 9 மணி வரை, 50 சதவீத இருக்கைகளுடன்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று மதுபானங்கள் பார்களும் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிவழங்கப்பட்டுள்ளது. மேலும், மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள பார்கள் மட்டுமே இந்த  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்களை பொருத்தவரை, அந்த இடத்தில் அனுமதிக்கப்படும் பொதுவான எண்ணிக்கையில், 50 சதவீதம் பேர் செல்லாம் என அனுமதி வழ்ங்கப்பட்டுள்ளது. மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் தொடர்பாக படபிடிப்புகள் நடத்த, முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Also Read | சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 7 மார்க்கெட்கள் ஆகஸ்ட் 9 வரை மூடப்பட்டது

தமிழகத்தை பொருத்தவரை,  தியேட்டர்கள் மற்றும் மதுபான பார்கள் இன்னும் திறக்கப்படவில்லை.  தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு இன்று முடிவடைய இருந்த நிலையில், தமிழக அரசு, நாளை முதல் ஆகஸ்ட் 9 காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வழங்கபப்ட்ட தளர்வுகளைத் தவிர கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும்,  சில இடங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,986 பேர். இது நேற்றைவிட சற்றே அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 204 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Also Read | தமிழகத்தில் 3வது அலையை தடுக்க நடவடிக்கை: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News