ஜூலை 1-ம் தேதி முதல் `காத்திருப்போர் பட்டியல்` கிடையாது :இந்தியன் ரெயில்வே அறிவிப்பு

Last Updated : Jun 23, 2016, 12:18 PM IST
ஜூலை 1-ம் தேதி முதல் `காத்திருப்போர் பட்டியல்` கிடையாது :இந்தியன் ரெயில்வே அறிவிப்பு title=

சிறப்பு ரெயில்களில் ஜூலை 1-ம் தேதி முதல் இனி காத்திருப்போர் பட்டியல் கிடையாது என்றும், டிக்கெட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே டிக்கெட் வழங்கபடும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்தியன் ரெயில்வே நிர்வாகம் வரும் 1-நம் தேதி முதல் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டால் லச்சக்கணக்கான ரெயில் பயணிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு செய்த தட்கல் டிக்கெட் ரத்து செய்தால் 50% தொகை திரும்ப கிடைக்கும் விதிமுறை அமலாகிறது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நேரம் மாற்றப்படுகிறது. அதன்படி ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு முதல் 11 மணி வரையிலும், படுக்கை வசதியுடன் கூடிய (ஸ்லீப்பர் கோச்) பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 11 முதல் 12 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ராஜ்தானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் உள்ள ரயில் பெட்டிகளின் (கோச்) எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

முக்கிய விழக்காலங்களில் இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட் கட்டணத்தில் பாதி திரும்ப வழங்கப்படும்.

ரத்து செய்யப்படும் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட்டுகளின் கட்டணம் 50 சதவீதம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும். இதேபோல மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.90 பிடித்தம் செய்யப்படும். 

படுக்கை வசதி (ஸ்லீப்பர் கிளாஸ்) டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.60 பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு பல அதிரடி மாற்றங்களை இந்திய ரெயில்வே வரும் ஜூலை 1-நம் தேதி முதல் அமல்படுத்துகிறது.

பல்வேறு மொழிகளிலும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரெயில்வே கொண்டு வர உள்ளது.

Trending News