ஜூன் 1 முதல் இவற்றில் மாற்றம்: தினசரி வாழ்விலும் இருக்கும் தாக்கம்

ஜூன் 1, 2021 முதல் நம் நாட்டில் சில அன்றாட செயல்முறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. வங்கித் துறை முதல் வருமான வரி தாக்கல் வரை சில முக்கியத் துறைகளில் இந்த மாற்றங்கள் இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 31, 2021, 06:25 AM IST
  • வருமான வரித் துறையின் மின்-தாக்கல் போர்ட்டல் மாறவுள்ளது.
  • LPG எரிவாயு சிலிண்டர்களின் விலை ஜூன் 1 அன்று மாறக்கூடும்.
  • Google சேமிப்பக இடம் இனி இலவசமாக கிடைக்காது.
ஜூன் 1 முதல் இவற்றில் மாற்றம்: தினசரி வாழ்விலும் இருக்கும் தாக்கம் title=

1 ஜூன், 2021 முதல் நம் நாட்டில் சில அன்றாட செயல்முறைகளில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. இவை மக்களது தினசரி வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. வங்கித் துறை முதல் வருமான வரி தாக்கல் வரை சில முக்கியத் துறைகளில் இந்த மாற்றங்கள் இருக்கும். 

இந்த மாற்றங்களைப் பற்றி பொது மக்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும். 1 ஜூன், 2021 வரை ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்கள் குறித்த விவரங்களை இங்கே காணலாம். 

வருமான வரி மின் தாக்கல் செய்யும் தளம் 

வருமான வரித் துறையின் (Income Tax Department) மின்-தாக்கல் போர்டல் (E-Filing Portal) ஜூன் 1 முதல் 6 வரை இயங்காது. வருமான வரித் துறை, ஜூன் 7 ஆம் தேதி வரி செலுத்துவோருக்கு, வருமான வரி மின் தாக்கலுக்கான புதிய போர்ட்டலை தொடங்கும். தற்போது வரை http://incometaxindiaefiling.gov.in. என்ற வலைத்தளம் இயக்கத்தில் உள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் 7 ஜூன் 2021 முதல் மாறும். ஜூன் 7 முதல், http://INCOMETAX.GOV.IN என்ற வலைத்தளம் இயக்கத்தில் இருக்கும். 

எரிவாயு சிலிண்டர் விலை

LPG எரிவாயு சிலிண்டர்களின் விலை ஜூன் 1 அன்று மாறக்கூடும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர்களின் விலையை தீர்மானிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. விலைகள் மாற்றப்படும் போது, அப்போது உள்ள நிலையைப் பொறுத்து விலைகள் அதிகரிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். 

ALSO READ: PF கணக்கு உள்ளவர்களுக்கு 7 லட்சம் ரூபாய்: யாருக்கு, எப்படி கிடைக்கும்? விவரம் உள்ளே!!

ஜூன் 1 முதல் பாங்க் ஆப் பரோடாவில் பாசிடிவ் பே சிச்ஸ்டம் 

ஜூன் 1 முதல், காசோலை மூலம் பணம் செலுத்தும் முறை வங்கியில் மாற உள்ளது என்பதை பாங்க் ஆப் பரோடாவின் வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக 'பாசிடிவ் பே சிஸ்டம்' என்ற செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இதன்படி காசோலை வழங்குபவர் அந்த காசோலை தொடர்பான சில தகவல்களை மின்னணு முறையில் வங்கிக்கு வழங்க வேண்டும். இந்த தகவலை எஸ்எம்எஸ், மொபைல் செயலி, இணைய வங்கி அல்லது ஏடிஎம் மூலம் வழங்கலாம். வாடிக்கையாளர்கள் 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி காசோலையை வழங்கும்போது மட்டுமே பாசிடிவ் பே முறையின் கீழ் காசோலை விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

Google சேமிப்பக இடம் இனி இலவசமாக கிடைக்காது

ஜூன் 1 முதல், கூகிள் (Google) ஃபோடோசில் வரம்பற்ற புகைப்படங்களை பதிவேற்ற முடியாது. ஒவ்வொரு GMail பயனருக்கும் 15 ஜிபி இடம் வழங்கப்படும் என்று கூகிள் கூறுகிறது. இந்த இடத்தில் GMail-லின் மின்னஞ்சல்கள், உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் அடங்கும். இதில் Google Drive-வும் இடம்பெறும். நீங்கள் 15 ஜிபிக்கு மேல் இடத்தைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதுவரை வரம்பற்ற சேமிப்பு இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: SBI Alert: எஸ்பிஐ வங்கியின் பயனுள்ள அறிவிப்பு; வங்கி பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News