ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் 3 இந்திய வீரர்கள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்துள்ளது. காஷ்மீரின் மேக்சல் செக்டார், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் கிராமவாசிகள் சிலர் உயிர் இழந்து உள்ளனர். இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
காஷ்மீரில் உள்ள மேக்சல் செக்டாரில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் குறித்து ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரிடம், துணை ராணுவ தளபதி பிபின் ராவத் விரிவாக எடுத்துக்கூறியுள்ளார்.
கடந்த மாதம் அக்டோபர் மாதம் 29ம் தேதிக்கு பின்னர் உயிரிழந்த வீரரின் உடலை பாகிஸ்தான் ராணுவம் சிதைப்பது இது இரண்டாவது முறையாகும்.
காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலிருந்த சில பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்த சம்பவத்துக்கு பிறகு, அந்த நாட்டு ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் இழந்து உள்ளனர். இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.