மாநில மற்றும் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி செல்கிறார்!
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நாளை (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முக்கி பிரச்சினைகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.
மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளுக்கு பின் 2-வது அமர்வில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இதையடுத்து, பிரதமர் மோடி சிறப்புரை நிகழ்த்துகிறார். இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டில் துணைநிலை கவர்னர்களுக்கு என சிறப்பு அமர்வு ஒன்றும் இரண்டாவது நாள் அதாவது, 5–ந்தேதி தனியாக நடத்தப்படுகிறது. இதில் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முக்கிய திட்டங்களின் நிலவரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் மந்திரிசபை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இந்த 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்களுடன், மத்திய மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி செல்கிறார்.