சென்னை to திருத்தணி ரயில் சேவையில் மாற்றம் -விவரம் உள்ளே!

சென்னை to திருத்தணி பிரிவில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் ரயில் சேவை மாற்றம்!

Last Updated : Mar 24, 2018, 07:45 AM IST
சென்னை to திருத்தணி ரயில் சேவையில் மாற்றம் -விவரம் உள்ளே! title=

சென்னை to திருத்தணி பிரிவில் பட்டாபிராம் கிழக்கு-திருவள்ளூர் இடையே பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச், 24, 25) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்...! 

1. மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-திருவள்ளூர் வரை காலை 9.15, 9.30, நண்பகல் 12.10, மதியம் 1.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள்.

2. திருவள்ளூர்-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை காலை 10.05, காலை 10.50, முற்பகல் 11.25, பிற்பகல் 2.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள்.

3. திருவள்ளூர்-வேளச்சேரி வரை முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில். 

4. ஆவடி-சென்னை கடற்கரை வரை மதியம் 1.35 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் சிறப்பு மின்சார ரயில். 

மார்ச் 24-ம் தேதி பகுதி ரத்து செய்யப்படும் ரயில்கள் பற்றிய விவரம்...!

1. வேளச்சேரி-திருத்தணி வரை காலை 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
 
2. வேளச்சேரி-திருவள்ளூர் வரை நண்பகல் 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.

3. வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவப் பகுதி வரை நண்பகல் 12.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில். 

4. வேளச்சேரி-அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை வரை மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்.

 விரைவு ரயில் பாதையில் இயக்கம்:- 

திருவள்ளூரில் இருந்து பட்டாபிராம் கிழக்கு வரை சில ரயில்கள் விரைவுப் பாதையில் இயக்கப்படவுள்ளதால், மார்ச் 24-ம் தேதி புட்லூர், திருநின்றவூர், நெமிலிசேரி, பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது. 

விவரம்:- 
 
1. திருத்தணி-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.

2. அரக்கோணம்-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை காலை 10.50, நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்.

3. அரக்கோணம்-ஆவடி வரை முற்பகல் 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.

4. திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை நண்பகல் 12 மணி, மதியம் 1.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.

5. கடம்பத்தூர்-வேளச்சேரி வரை நண்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.

6. திருவள்ளூர்-வேளச்சேரி வரை மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.

சிறப்பு பயணிகள் ரயில்கள் பற்றிய விவரம்...! 

1.மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-திருத்தணி வரை நண்பகல் 12.30 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.

2. ஆவடி-மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை மதியம் 1.30 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.

இதை தொடர்ந்து  மார்ச் 25-ம் தேதியும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து, பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சில மின்சார ரயில்கள் மாற்றப்பாதையில் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News