தெலங்கானா தேர்தல்: திருநங்கை வேட்பாளர் சந்திரமுகி மாயம்!

டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெறவுள்ள தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 32 வயது திருநங்கை சந்திரமுகி செவ்வாய் அன்று காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Nov 28, 2018, 09:38 AM IST
தெலங்கானா தேர்தல்: திருநங்கை வேட்பாளர் சந்திரமுகி மாயம்! title=

ஹைதராபாத்: டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெறவுள்ள தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 32 வயது திருநங்கை சந்திரமுகி செவ்வாய் அன்று காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

CPI(M) தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வரும் தெலுங்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திருநங்கை சந்திரமுகி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கோஷமஹால் தொகுதியில் போட்டியிடும் இவர், இத்தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் முகேஷ் கவுடு மற்றும் பாஜக தலைவர் டி. ராஜா சிங் ஆகியோரை எதிர்கொள்கின்றார். இந்நிலையில் இவர் நேற்று அவரது வீட்டில் இருந்து மாயமானதாக தெரிகிறது.

பிரச்சார பணிகளுக்காக அவளுக்கு உதவி செய்ய வந்த திருநங்கைகள், சந்திரமுகி வீட்டில் இல்லாததினை அறிந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். 

தொலைபேசி வாயிலாகவும் அவரை தொடர்புக்கொள்ள இயலவில்லை என குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர் என பஞ்ஜாரா ஹில்ஸ் பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆர் கோவிந்த ரெட்டி குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக "சந்திரமுகி காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Telangana Hijra Intersex Transgender Samiti இயக்கத்தில் செயல்பட்டு வந்த சந்திரமுகி மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஹிஜிரா சமூகத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களை எதிர்த்து போராடி வருகின்றார். மேலும் பல பேரணிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் வெளிப்படையான குரலாக இருந்தார், திருநங்கைகளின் சுய மரியாதையை நிலைநிறுத்தி தனது குரலை வெளிப்படுத்தி வந்தவர்.

இதன் காரணமாகவே சந்திரமுகியினை தேர்தலில் போட்டியிட வைப்பதென அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது இவர் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 7-ஆம் நாள் தெலுங்கானாவில் தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் காணமல் போயுள்ளது மாநிலத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Trending News