திரினாமுல் காங்கிரஸ் எம்.பி. அபருபா பொட்டார், புதிதாக பிறந்த தனது மகளுக்கு 'கொரோனா' என புனைப்பெயர் இட்டுள்ளார்.
COVID-19 தொற்றுநோய் உலகை ஒரு பயங்கரமான நிறுத்தத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,-யின் இந்த செயல்பாடு வெளிப்பட்டுள்ளது.
அவரது கணவர் முகமது ஷாகிர் அலி இதுகுறித்து தெரிவிக்கையில்., என் குழந்தை பிறந்த கடினமான காலத்தை தொற்றுநோய்க்கு பிறகும் நீண்ட காலத்திற்கு மக்கள் நினைவில் வைத்திருக்க விரும்பி இந்த பெயரை என் குழந்தைக்கு சூட்டியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
READ | மேற்கு வங்காளத்தில் மூச்சு-காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட 92,000 பேர்...
எம்.பி., அராம்பா வியாழக்கிழமை ஹூக்லி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் தங்களது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இதுகுறித்து அவர் மனம் திறக்கையில்., "நாங்கள் அவளுக்கு 'கொரோனா' என்ற புனைப்பெயரை வழங்கியுள்ளோம். தற்போதைய கொடிய நிலைமை ஒரு நாள் சிறப்பாக மாறும், ஆனால் அவரது பெயர் உலகம் முழுவதும் எதிர்கொண்ட கடினமான காலங்களை மக்களுக்கு தொடர்ந்து நினைவுபடுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
READ | மத்திய கோவிட் -19 அணியை தடுக்க வேண்டாம் என்று மம்தாவுக்கு MHA அறிவுறுத்தல்...
இதனிடையே மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி குழந்தை மற்றும் அவரது தாயார் குறித்து விசாரித்ததாக எம்.பி.,-யின் கணவர் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் தலைப்பு செய்தியில் இடம்பிடித்துள்ள இத்தம்பதியருக்கு ஆறு வயது மகள் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.