மீட்கப்பட்டது மேலும் 2 சடலங்கள்... டெல்லி வன்முறை பலி எண்ணிக்கை 44-ஆக உயர்வு!

டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கோகுல்பூரியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2020) இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 

Last Updated : Mar 1, 2020, 04:40 PM IST
மீட்கப்பட்டது மேலும் 2 சடலங்கள்... டெல்லி வன்முறை பலி எண்ணிக்கை 44-ஆக உயர்வு! title=

டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கோகுல்பூரியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2020) இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 

இந்த சடலங்கள் ஒரு சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டன, மீட்கப்பட்ட சடலங்களுடன் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது, மேலும் 250-க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் சடலம் காலை 10 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது, இரண்டாவது உடல் மாலை 3 மணியளவில் மீட்கப்பட்டது. இறந்த இருவரின் அடையாளம் இன்னும் அறியப்படவில்லை. முன்னதாக, புலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் உடலும் வடிகால் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கலவரக்காரர்களால் அங்கித் ஷர்மா கொடூரமாக தாக்கப்பட்டு குத்தப்பட்டார் என்பது பிரேத பரிசோதனை விவரங்கள் தெரியவந்தது.

முன்னதாக, வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய போராட்டம் காரணமாக ஏற்பட்ட ஆரம்ப இழப்பு கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி என்று டெல்லி சேம்பர் ஆஃப் காமர்ஸ் கணித்துள்ளது. கலவரத்தின் போது சுமார் 92 வீடுகள், 57 கடைகள், 500 வாகனங்கள், 6 கொடவுன்கள், 2 பள்ளிகள், 4 தொழிற்சாலைகள் மற்றும் 4 மத இடங்கள் எரிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி வன்முறை குறித்து இதுவரை 167 FIR பதிவு செய்து 885 பேரை தடுப்பு காவலில் காவல்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

டெல்லியில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கலகத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளும் மார்ச் 7-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவம் மற்றும் பலத்த பாதுகாப்புப் பணிகளை அடுத்து ஷாஹீன் பாக் பகுதியில் பிரிவு 144 விதிக்கப்பட்டது. அதிகாரிகள் தடை உத்தரவுகளை விதித்த பின்னர் இப்பகுதியில் குறைந்தது 1,000 ஜவான்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் 12 நிறுவனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தை உலுக்கிய வன்முறை மோதல்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23, 2020) ஜஃபராபாத் பகுதியில் உள்ள மஜ்பூர் சௌக்கில் சார்பு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடையே துவங்கியது. பின்னர், மோதல்கள் வடகிழக்கு டெல்லி தொகுதியின் பல பகுதிகளுக்கு பரவியது. தற்போது வன்முறை நிகழ்ந்த பகுதிகள் சிறிது சிறிதாய் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது, இருப்பினும் வன்முறையின் போது காணமல் போனோர் பலர் இன்னும் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News