3 வங்கிகள் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பரோடா (பாங்க் ஆப் பரோடா) வங்கியுடன், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Jan 3, 2019, 08:13 AM IST
3 வங்கிகள் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! title=

பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பரோடா (பாங்க் ஆப் பரோடா) வங்கியுடன், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது!

பொதுத்துறை வங்கிகளான இந்த 3 வங்கிகளையும் இணைப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பரிசீலினை செய்து வந்தது. ஆனால் வங்கி கூட்டமைப்பு இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த வங்கிகள் இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விஜயா மற்றும் தேனா வங்கிகளின் வர்த்தகம், சொத்துகள், உரிமைகள், உரிமங்கள், ஒப்புதல்கள் உள்ளிட்ட அனைத்தும் பரோடா வங்கியுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 2 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் புதிய வங்கியில் அதே பணிநிலையில் தொடர்வார்கள் என்றும், அவர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் அனைத்தும் தொடர்ந்து அதே நிலையில் வழங்கப்படும் எனவும் பரோடா வங்கி உறுதி அளித்துள்ளது.

இந்த வங்கிகள் இணைப்பு மூலம் பரோடா வங்கி நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவெடுக்கிறது. வருகிற நிதியாண்டு முதல் (ஏப்ரல் 1, 2019) இந்த 3 வங்கிகளும் இணைந்து ஒரே வங்கியாக செயல்படும் என அமைச்சரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல குடும்ப நலத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்வஸ்தா நக்ரிக் அபியான், கருத்தடை சாதனம் வழங்குதல் உள்ளிட்ட 5 திட்டங்களை வரும் 2020-ஆம் ஆண்டு வரை தொடர்வது எனவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேலையில் ‘பழங்குடியினர் திருத்த மசோதா 2018’-க்கும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News