அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிற்கே அகிம்சையை போதித்த காந்தியடிகளுக்கு நேர்ந்த அவமானம் இது என மக்கள் கொந்தளித்துள்ளனர்.
அமெரிக்கா (America) மட்டுமல்ல, கனடா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகளிலும்கூட மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலையை அடையாள தெரியாத மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா (India) அன்பளிப்பாக அளித்துள்ள இந்த ஆறு அடி உயரம், 294 கிலோ எடையும் கொண்டது. காந்தியின் ஆளுயர வெண்கலச் சிலையை நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்தியா அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது.
மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று, சிலையின் கால் பகுதியும் தலை பகுதியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் (Mahatma Gandhi) சிலை வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள, காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்லது இந்தியா எதிர்ப்பு மனப்பான்மை அமைப்புகள் மகாத்மா காந்தி சிலையைச் சேதப்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை வரவேற்று ட்வீட் செய்துள்ளதால், சந்தேகம் வலுவடைந்துள்ளது.
அமெரிக்காவில் காந்தியின் சிலை சேதப்படுத்தப்படுவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்தாண்டு டிசம்பரில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் இருந்த காந்தி சிலையைச் உடைத்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமெரிக்காவில் தடை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | உலகின் கோடீஸ்வரர் எலான் மஸ்கிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள இந்திய அமெரிக்க மாணவர்..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR