இந்து கோவில்களுக்கும், இஸ்லாமிய மசூதிகளுக்கும் வித்தியாசம் அறியாதவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் பாஜக சார்பில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தார் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். பிரச்சாரத்தின் போது, ராகுல் காந்தி இந்துக்களின் வாக்குகளை பெற சமீபகாலமாக பல கோவில்களுக்கு செல்கின்றார், ஆனால் அவருக்கு கோவிலில் எப்படி வழிப்படுவது என்று கூட தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
மசூதியில் பக்தர்கள் எப்படி வழிபடுவார்கள், கோவிலில் பக்தர்கள் எப்படி வழிப்படுவார்கள் என்று கூட தெரியாமல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் ராகுல் காந்தி என அவர் கடுமையாக விமர்சித்தார். குஜராத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தும் ராகுல் காந்தி அங்கு எப்படி வழிப்படுவது என அறியாமல் இருப்பது வேடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய யோகி., அம்மாநிலத்தில் வசிக்கும் பெருன்பான்மை பழங்குடியினரின் வாக்குகளை பெறும் விதமாக "ஹனுமான் பழங்குடியினரின் முன்னோடி" என குறிப்பிட்டுள்ளார். மேலும் அம்மாநிலம் தான் கடவுள் ராமரின் தாய்வீடு எனவும், ராமருக்கு சேவகம் செய்த ஹனுமன் பழங்குடியினரின் முன்னோடி எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ராம ராஜியத்தினை அமைக்க பாஜக முயன்று வருகிறது, ஆனால் காங்கிரஸ் அதனை செய்ய விடாமல் தடுத்து வருகிறது எனவும் யோகி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்ட தடுப்புகளை ஏற்படுத்தி வருவது காங்கிரஸ் தான் எனவும், ஆனால் பாஜக தனது முயற்சியினை விடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பிரதேசம் | 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில்
- வாக்குப்பதிவு - நவம்பர் 28, 2018
- வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018c