சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறும் காவல்துறையினருக்கு 50 வயதில் கட்டாய பணி ஓய்வு திட்டத்தை உத்தரபிரதேசம் மாநில அரசு நிறைவேற்ற உள்ளது!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் BJP தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பலவரு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், உத்தரபிரதேச காவல்துறையினர் ஒழுங்காக பணியற்றுகின்றார்களா?, சட்டம்-ஒழுங்கை காபற்றுகின்றனரா? என்பதை கண்டறிவதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி கடந்த மார்ச் 31 ஆம் தேதி வரை 50 வயது முடிந்த DGs, ADGs, IGs, DIGs,SPs மற்றும் மற்ற பொறுப்புகளில் உள்ள காவலர்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்காதவர்கள் அடங்கிய பட்டியலை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ADG பியூஷ் ஆனந்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கான சுற்றறிக்கை கடந்த 21 ஆம் தேதி காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 56-வது விதியின்படி , ‘50 வயதை கடந்த பணியில் ஒழுங்கில்லாத காவல் அதிகாரிகளுக்கு பணி ஓய்வினை அரசாங்கமே வழங்கலாம்’ என்ற திட்டம் வெளிவந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்த சுற்றறிக்கை அரசு சார்பில் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநில அரசு, போலீசார் சட்டம் ஒழுங்கினை பாதுகாத்து, ஒழுங்காக கடமையாற்றவே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.