முன்னாள் ‘மனைவி’ இன்னாள் ‘சித்தி’ ஆன சோகக்கதை; RTI மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்

2016 ஆம் ஆண்டில் இளைஞர் அந்த பெண்ணை மணந்திருந்தார். அப்போது இருவருக்கும் 18 வயது நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் பிரிந்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 4, 2021, 01:16 PM IST
  • 2016 ஆம் ஆண்டில் இளைஞர் அந்த பெண்ணை மணந்திருந்தார்.
  • அப்போது இருவருக்கும் 18 வயது நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் பிரிந்தனர்.
முன்னாள் ‘மனைவி’ இன்னாள் ‘சித்தி’ ஆன சோகக்கதை; RTI மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல் title=

உத்தரபிரதேசத்தின் பதாவுன் நகரில் ஒரு இளைஞன் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தனியாக வசித்து வந்த, நிலையில், தனது தந்தையைப் பற்றிய தகவல்களை சேகரிக்க மகன் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை கோரி தாக்கல் செய்தபோது வெளியான சம்பவம், அந்த இளைஞனை அதிர்ச்சிக்குளாக்கியது. 

ஒரு துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் இளைஞனது தந்தை, அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டு சம்பல் பகுதியில் தனியாக வசிக்கத் தொடங்கினார். இதன் காரணமாக அந்த இளைஞர் தனது தந்தையை பற்றிய தகவலை அறிய, தகவல் அறியும் உரிமை  சட்டத்தின் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதில் அவருக்கு கிடைத்த தகவல், இளைஞனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தந்தை தனது முன்னாள் மனைவியை உண்மையில் திருமணம் செய்து கொண்டார் என்று மகன் அறிந்ததும், அவர் பிசவுலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில், சனிக்கிழமை தந்தை மகன் இருவருக்கும் இடையிலான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ALSO READ | 14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்

"சனிக்கிழமையன்று நடந்த சந்திப்பில் தந்தை மற்றும் மகன் இருவரும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். இருப்பினும், நாங்கள் மத்தியஸ்தத்திற்கு முயற்சிக்கிறோம். புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சட்டப்படி போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர் ”என்று வட்ட அலுவலர் வினய் சவுஹான் கூறினார்.
இதற்கிடையில், இப்போது தனது முன்னாள் கணவரின் ‘சித்தியாக’ இருக்கும் பெண், தனது இரண்டாவது

கணவருடன் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார். "இருவரும் மைனராக இருந்தபோது நடந்த திருமணம் என்பதால் அதற்கான சட்ட ரீதியான ஆவணங்களும் இல்லை. இப்போதைக்கு அது தொடர்பாக ஒரு வழக்கை பதிவு செய்ய முடியாது” என்று வட்ட அதிகாரி கூறினார். 

2016 ஆம் ஆண்டில் இளைஞர் அந்த பெண்ணை மணந்திருந்தார். அப்போது இருவருக்கும் 18 வயது நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் பிரிந்தனர். அவர் கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயன்ற போதிலும், அந்த இளைஞன் குடிக்கு அடிமையாக இருப்பதாகக் கூறி விவாகரத்து செய்யுமாறு அந்த பெண் வற்புறுத்தினாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | பெண் அதிகாரியை முத்தமிட்ட Tamil Nadu Special DGP மீது பாலியல் குற்றச்சாட்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News