தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 30, 2022, 01:11 PM IST
  • தமிழ்நாடு கால்நடைகள் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு
  • வேலை வாய்ப்பு செய்திகள் முழு விவரத்துடன்
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு title=

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Project Associate-I, Project Associate-II பணியிடம் நிரப்பப்பட இருக்கிறது.

கல்வி தகுதி:

Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Life Sciences பாடப்பிரிவில் M.V.Sc, Master Degree அல்லது Bio technology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அதேபோல் இந்தப் பணிக்கு 2 ஆண்டுகள் Research, Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Project Associate-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.31,000வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

மேலும் படிக்க | PPF vs Sukanya Samriddhi Yojana: உங்களுக்கு ஏற்ற முதலீடு எது? முழு கணக்கீடு இதோ

Project Associate-II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.28,000 முதல் அதிகபட்சம் ரூ.35,000வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பணிகளுக்கு தகுதி உள்ளவர்கள் ஜூன் 9ஆம் தேதி நடக்கும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் படிக்க | இபிஎஃப் கணக்கில் புதிய நாமினேஷனை தாக்கல் செய்வது எப்படி?

அதனையடுத்து,TRPVB, 2nd Floor, Central University Laboratory Building, TANUVAS, Madhavaram Milk Colony,
Chennai-600 051 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News