காத்மாண்டு விமான விபத்து: குறைந்தது 50 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்

71 பேருடன் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்

Last Updated : Mar 12, 2018, 06:33 PM IST
காத்மாண்டு விமான விபத்து: குறைந்தது 50 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்

அமெரிக்காவில் இருந்து வங்காள தேசம் சென்ற விமானம் நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் தரை இறங்கும் போது விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளனா விமானம் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த விமானத்தில் மொத்தம் 71 பயணிக்கள் இருந்தனர். அதில் 20 பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 

 

 

விமானம் விபத்துகுள்ளானதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து காரணமாக காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.  காத்மண்டு திரிபுவன் சர்வதேச நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேபாள மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

 

 

More Stories

Trending News