உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு கொடூரம்: 14 வயது மைனர் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

வயலில் வேலைப்பார்த்துக் கொண்டு இருந்த 14 வயது மைனர் பெண்ணின் கைகளை கட்டி மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Dec 7, 2019, 12:00 PM IST
உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு கொடூரம்: 14 வயது மைனர் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்
File photo

புலந்தசகர்: உத்தரபிரதேசத்தில் (Uttar Pradesh) தொடர்ந்து வரும் கற்பழிப்பு வழக்குகள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள ஒரு வழக்கு புலந்தசகர் பகுதியை சேர்ந்தது. வயலில் காய்கறிகளை வேலைப்பார்த்துக் கொண்டு இருந்த 14 வயது மைனர் பெண்ணின் கைகளை கட்டி பிணைக் கைதியாக்கி மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் பலாத்காரம் செய்த காட்சியை, அந்த கும்பல் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக ஊடகங்களில் வைரல் செய்துள்ளனர். இந்த சம்பவம் டிசம்பர் 3 ஆம் தேதி நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்ததை அடுத்து, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட பெண்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த மூன்று மைனர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் வீடியோவை வைரல் செய்த நான்காவது குற்றவாளியையும் போலீசார் பிடித்துள்ளனர். 

போலீஸ் அதிகாரி எஸ்.எஸ்.பி (SSP) எஸ்.கே.சிங் (Santosh Kumar Singh) கூறுகையில், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக மூன்று சிறு இளைஞர்கள் (Minors) கைது செய்யப்பட்டுள்ளனர் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டதற்காக மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவர் பிடிபட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். 

 

முன்னதாக உன்னாவோவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் வெள்ளிக்கிழமை இரவு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில், உன்னாவோ மாவட்டத்தில் ஜனவரி முதல் நவம்பர் வரை 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த காலகட்டத்தில் உன்னாவ் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 185 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.