காவி மயம் ஆகும் உத்தர பிரதேசம் - நடப்பது என்ன?

உத்திரபிரதேச மாநிலம் பிலிபட் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Last Updated : Dec 9, 2017, 09:16 AM IST
காவி மயம் ஆகும் உத்தர பிரதேசம் -  நடப்பது என்ன?

உத்தர பிரதேசத்தில் 100-க்கும் மேலான அரசு பள்ளி கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக அங்குள்ள அரசு கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்படுவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்து வரும் நிலையில் தற்போது இந்த இந்நிகழ்வு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பிலிபட் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர் கூறுகையில், கிராமப்புற தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்த போதிலும் கட்டாயமாக இச்செயல்பாடு நிகழ்த்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

More Stories

Trending News