இந்திய நாட்டின் 13வது துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைம் நிலையில். இப்பதவிக்கான வேட்பாளர்களாக பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியிடப்பட்டது. அதன்படி 272 வாக்குகள் வித்தியாசத்தில் துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
விரைவில் வெங்கையா நாயுடு குடியரசுத் துணை தலைவராக பதவியேற்கவுள்ளார். இந்த வெற்றியை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.