ஃபானி புயல் ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே கரையை கடக்க தொடங்கியது.
சென்னை அருகே வங்கக்கடலில் கடந்த மாதம் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது புயலாக மாறியது. அந்தப் புயலுக்கு ‘ஃபானி’ என பெயர் சூட்டப்பட்டது. ‘ஃபானி’ புயல் தமிழ்நாட்டை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் ‘ஃபானி’ புயல் பாதை மாறியது.
அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால், கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த புயலானது, இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது.
ஃபானி புயல் கரையை கடக்கத் தொடங்கி இருப்பதால் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பூரி நகருக்கு தென்மேற்கு பகுதியில் இருந்த ஃபானி புயல் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
#WATCH #CycloneFani hits Puri in Odisha. pic.twitter.com/X0HlYrS0rf
— ANI (@ANI) May 3, 2019