மாநிலங்களவை தைரியமான முடிவுகளை எடுத்தது, அதை இரண்டாம் நிலை செய்ய வேண்டாம்: மோடி

பன்முகத்தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளது என 250-ஆவது கூட்டத் தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!! 

Last Updated : Nov 18, 2019, 04:15 PM IST
மாநிலங்களவை தைரியமான முடிவுகளை எடுத்தது, அதை இரண்டாம் நிலை செய்ய வேண்டாம்: மோடி title=

பன்முகத்தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளது என 250-ஆவது கூட்டத் தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!! 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை துவங்கிய நிலையில், மாநிலங்களவையின் 250 ஆவது கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அப்போது, இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களவையின் பங்கு குறித்து பிரதமர் பேசுகையில்; ‘மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள். மேலும், அவர்களை மனமார பாராட்டுகிறேன். மாநிலங்களவை பல வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளை சந்தித்த பெருமைகளை கொண்டது.  

இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களவையின் பங்கு போற்றத்தக்கது. வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவதில் பெருமையடைகிறேன். மாற்றங்களை ஏற்று அதனுடன் பயணிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை பிரதிபலிக்கிறது மாநிலங்களவை. டாக்டர் அம்பேத்கர் மாநிலங்களவை வாயிலாகத்தான் நாடாளுமன்றத்திற்கு அறிமுகம் ஆனார்’ என்று பிரதமர் பேசினார். 

நரேந்திர மோடி மேலும் பேசுகையில்; ‘தேர்தலில் பங்கேற்காதவர்களும் நாட்டின் வளர்சிக்கு உதவ மாநிலங்களவை வாய்ப்பளிக்கிறது. சிறந்த தலைவர்கள் பலர் மாநிலங்களவையில் உரையாற்றி இருக்கின்றனர். முத்தலாக் மசோதா இங்கு நிறைவேற்றப்படாது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால், அது நடந்தேறியது. இதேபோல்தான் GST-யிலும் நடைபெற்றது. 370 சட்டப்பிரிவு  நீக்கம் மற்றும் 35(A) தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது மாநிலங்களவையின் பங்கை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த சபை வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க உரைகளை தந்துள்ளது. ராஜ்யசபாவின் சபாநாயகர் இருக்கை அருகே செல்லும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. இந்த கட்சியினரை பார்த்து பிற கட்சியினர் கற்று கொள்ள வேண்டும். 

கடந்த 2003 ஆம் ஆண்டில், மாநிலங்களவை இரண்டாவது வீடாக இருக்கலாம், ஆனால் அதை இரண்டாம் நிலை வீடு என்று அழைக்கக்கூடாது என்று அடல் ஜி குறிப்பிட்டிருந்தார். இன்று, நான் அடல் ஜியின் எண்ணங்களுடன் உடன்படுகிறேன். இன்று நான் NCP மற்றும் BJD ஆகிய இரு கட்சிகளைப் பாராட்ட விரும்புகிறேன். இந்த கட்சிகள்  நாடாளுமன்ற விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்துள்ளன. நான் உள்ளிட்ட பிற கட்சிகள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்’ என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

 

Trending News