IRCTC அளித்த முக்கிய அறிவிப்பு: இதை மட்டும் செஞ்சிடாதீங்க

IRCTC News: ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. இந்த செயலி ஒரு தீங்கு விளியவிக்கும் செயலி என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 18, 2023, 06:56 PM IST
  • மோசடி செய்பவர்கள் பெரிய அளவில் மக்களுக்கு ஃபிஷிங் இணைப்பை அனுப்புகிறார்கள்.
  • ஃபிஷிங் இணைப்பைக் கிளிக் செய்ய இந்த மோசடிக்காரர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள்.
  • ஃபிஷிங் இணைப்புகள் மிகவும் ஆபத்தானவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
IRCTC அளித்த முக்கிய அறிவிப்பு: இதை மட்டும் செஞ்சிடாதீங்க title=

IRCTC Advisory : ரயில் பயணிகளுக்கு முக்கியமான செய்தி உள்ளது. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செயலியான ஐஆர்சிடிசி பொது அறிவுரையை வெளியிட்டுள்ளது. 'irctcconnect.apk' என்ற சந்தேகத்திற்குரிய ஆண்ட்ராய்டு பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டாம் என்று ஐஆர்சிடிசி மக்களை எச்சரிக்கிறது. வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபலமான மெசேஜிங் தளங்களின் பயனர்களுக்கு இந்த செயலிக்கான அழைப்பு அனுப்பப்பட்டு, அதைப் பதிவிறக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இந்த அழைப்பு வந்தால் அவ்வாறு செய்ய வேண்டாம் என ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது.

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. இந்த செயலி ஒரு தீங்கு விளியவிக்கும் செயலி என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இதை மொபைலில் இன்ஸ்டால் செய்தால், இது உடனடியாக மொபைலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. இதனால் உங்கள் தனிப்பட்ட தகவல் ஹேக்கரின் கட்டுப்பாட்டில் செல்லக்கூடும். 

சைபர் மோசடிக்காரர்கள் ஐஆர்சிடிசி போர்வையில் மோசடி செய்கின்றனர்

இந்த செயலியின் பின்னணியில் உள்ள சைபர் மோசடிக்காரர்கள் தாங்கள் ஐஆர்சிடிசியை சேர்ந்தவர்கள் என்று கூறுவதாக ஐஆர்சிடிசி கூறுகிறது. தங்களை ஐஆர்சிடிசி அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு, உங்களின் UPI விவரங்கள் மற்றும் பிற முக்கியமான கிரெடிட்/டெபிட் கார்டு வங்கி விவரங்கள் போன்ற உங்களின் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கு அவர்கள் உங்களை சிக்க வைக்கின்றனர். ஆகையால், இந்த செயலியைப் பதிவிறக்குவதைத் தவிர்ப்பது மற்றும் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலியிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இதுதான் ஐஆர்சிடிசி -இன் அதிகாரப்பூர்வ செயலி

மோசடி செய்பவர்கள் பெரிய அளவில் மக்களுக்கு ஃபிஷிங் இணைப்பை அனுப்புகிறார்கள். ஃபிஷிங் இணைப்பைக் கிளிக் செய்ய இந்த மோசடிக்காரர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். ஃபிஷிங் இணைப்புகள் மிகவும் ஆபத்தானவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், அவற்றைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் அனைத்து விவரங்களும் இணைய திருடர்களின் கைகளுக்கு செல்லும். 

மேலும் படிக்க | ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பது ஏன் தெரியுமா...? 

ஆகையால் இது குறித்த எச்சரிக்கையை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. இந்த செயலியை நிறுவ வேண்டாம் என்றும் இதுபோன்ற மோசடி செய்பவர்களிடமிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பயனர்களுக்கு ஐஆர்சிடிசி  அறிவுறுத்தியுள்ளது. ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வமான 'ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட்' மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து எப்போதும் பதிவிறக்குமாறும் ஐஆர்சிடிசி அறிவுரை கூறியுள்ளது. 

குறிப்பு: ஐஆர்சிடிசி தனது வாடிக்கையாளர்களின் பின், ஓடிபி, பாஸ்வர்ட், கிரெடிட் / டெபிட் கார்ட் விவரங்கள், நெட் பேங்கிங்க் பாஸ்வர்ட் யுபியை விவரங்கள் ஆகியவற்றை ஒருபோதும் கேட்காது. 

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்..ரயில்வே இந்த பெரிய முடிவை எடுக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News