குறைகூறும் மோடி, பணத்தை வாங்க மறுப்புத் ஏன் -விஜய் மல்லையா!

கடன் வாங்கி தப்பிச்சென்றதாக என்னைக் குறைகூறும் மோடி, நான் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு வங்கிகளிடன் ஏன் கூறுவதில்லை என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்!

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Feb 14, 2019, 12:55 PM IST
குறைகூறும் மோடி, பணத்தை வாங்க மறுப்புத் ஏன் -விஜய் மல்லையா!

கடன் வாங்கி தப்பிச்சென்றதாக என்னைக் குறைகூறும் மோடி, நான் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு வங்கிகளிடன் ஏன் கூறுவதில்லை என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்!

மக்களவையின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தனது உரையில் "வங்கிகளிடம் இருந்து 9 ,000 கோடி ரூபாயை கடனாக வாங்கிவிட்டு ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார் என பெயர் குறிப்பிடாமல் விஜய் மல்லையாவை சாடினார்.

மேடியின் இந்த உரையினை கேட்ட மல்லையா., தற்போது தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக மோடிக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்... தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

"நான் வாங்கிய கடனில் ஒரு பகுதியை திருப்பித் தர தயாராக உள்ளேன். ஆனால் வங்கிகள் அந்த பணத்தை ஏற்க மறுக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடி ஏன் கேள்வி எழுப்பவில்லை

வங்கிகளிடன் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறி அதன் மூலம் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு கொடுத்த பொதுமக்களின் பணத்தை வசூலித்துவிட்டதாக அவர் பெருமையாக சொல்லிக் கொள்ளலாமே?" என தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9000 கோடி வரை கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தேடப்படும் பொருளாதார குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திய, தலைமறைவு பொருளாதார மோசடியாளர் தடுப்பு (எஃப்.ஈ.ஓ.) சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள முதல் தொழிலதிபர் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டப்பிரிவின் கீழ், மல்லையாவை குற்றவாளி என அறிவித்து அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த வழக்கில், அமலாக்கத்துறையின் கோரிக்கை பகுதியளவு ஏற்கப்படுகிறது. எஃப்.ஈ.ஓ. சட்டத்தில் உள்ள 12(1) பிரிவின்படி, மல்லையா தேடப்படும் பொருளாதார குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.