காங்கிரஸ் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்...

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்!

Last Updated : May 17, 2019, 12:40 PM IST
காங்கிரஸ் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்... title=

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்!

பஞ்சாப் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இம்மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையில் மும்முனை போட்டி நடைப்பெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு பிரசார பீரங்கியாக இருக்கிறார். 

சில தினங்களாக சித்து மனைவி அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். எனினும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான அமரிந்தர் சிங் எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தொய்வு ஏற்படுமோ? என்று தலைவர்கள் அஞ்சி வருகின்றனர். இந்நிலையில், "சித்து மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்" என அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Trending News