பட்டாசுகள் விற்பனை இந்தியாவில் தடை செய்யபடுமா?: SC தீர்ப்பு....

பட்டாசுகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் இருப்பு வைத்திருத்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது....

Last Updated : Oct 23, 2018, 09:45 AM IST
பட்டாசுகள் விற்பனை இந்தியாவில் தடை செய்யபடுமா?: SC தீர்ப்பு.... title=

பட்டாசுகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் இருப்பு வைத்திருத்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது....

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாலும், காற்று மாசு, சுவாசக் கோளாறு ஏற்படுவதாலும், பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமனறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு எதிராகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.  வழக்கு விசாரணையின்போது, பட்டாசுத் தொழில் செய்வதற்கான உரிமையும் பாதிக்கப்படக்கூடாது, 130 கோடி மக்களின் உடல்நலம் பாதிக்கப்படக்கூடாது, இரண்டுக்கும் இடையே சமநிலை உண்டாக்குவது அவசியம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.   

பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையில் நாடு தழுவிய தடை விதிக்கக் கூடாது என்றும், அரசின் கண்காணிப்புடன் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பட்டாசு ஆலைகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News