PM-SYM: மாதம் ₹55 முதலீட்டில், ₹36,000 ஓய்வூதியம் வழங்கும் அசத்தில் திட்டம்..!!

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (PM-SYM) என்னும் திட்டம் குறிப்பாக அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 19, 2021, 08:44 AM IST
  • திட்டத்தில் இணைய, எந்தவொரு பொது சேவை மையத்திற்கு சென்று உங்கள் PM-SYM கணக்கைத் திறக்கலாம்
  • 30 வயது விண்ணப்பதாரர் இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ .100 முதலீடு செய்ய வேண்டும்.
  • அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது
PM-SYM:  மாதம் ₹55 முதலீட்டில், ₹36,000 ஓய்வூதியம் வழங்கும் அசத்தில் திட்டம்..!!  title=

புதுடெல்லி: எல்லோரும் தங்கள் எதிர்காலம் குறித்து கவலை உள்ளது. பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ள மக்கள் தங்கள் முதுமை காலத்திற்கான பணம் சேர்ப்பது மிகவும் கடினம். இந்த பிரச்சனையை சமாளிக்க, மத்திய அரசு பல ஓய்வூதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.

இந்த ஓய்வூதிய திட்டங்களில் மிக முக்கியமானது பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (PM-SYM). மோடி அரசின் இந்த ஓய்வூதியத் திட்டம் குறிப்பாக அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 36 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறலாம். 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். திட்டத்தின் பிரீமியம் தொகையும் வயது அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ .36,000 ஓய்வூதியம்  அதாவது மாதத்திற்கு ரூ .3000 என்ற அளவில் பென்ஷன் வழங்கப்படும். 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது. இதற்காக 3.52 லட்சம் பொது சேவை மையங்களும் உள்ளன.

இந்தத் திட்டத்தில் இணைய, எந்தவொரு பொது சேவை மையத்திற்கு சென்று உங்கள் PM-SYM கணக்கைத் திறக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, உங்களிடம் ஆதார் அட்டை மற்றும் வங்கி பாஸ் புக் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும். பிரதமர் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனாவில் கணக்கு திறக்கப்பட்ட பிறகு, விண்ணப்பதாரருக்கு ஷ்ராம் யோகி அட்டையும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், நீங்கள் ரூ 55 முதல் ரூ .200 வரை முதலீடு செய்யலாம். 18 வயது விண்ணப்பதாரர் இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ .55 முதலீடு செய்ய வேண்டும். 30 வயது விண்ணப்பதாரர் இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ .100 முதலீடு செய்ய வேண்டும். இது தவிர, 40 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ .200 முதலீடு செய்ய வேண்டும். 18 வயதில் இருந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கும் விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் 42 வயது வரை முதலீடு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயது வரை பிரதமர் ஸ்ராம் யோகி மந்தன் யோஜனாவில் ரூ .27,720  மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு 60 வயதுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.

ALSO READ | Share Market: 5 லட்சம் போட்டால் ஒரே ஆண்டில் 70 லட்சம், 1200 % லாபம் அளிக்கும் பங்கு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News