கை தட்டல், மணி சப்தம் மூலம் கொரோனா வைரஸ் போராளிகளுக்கு நன்றி தெரிவித்த இந்தியா..!

தன்னலம் கருதாமால் உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களை கெளரவிக்கும் வகையில், அரசியல் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கைத்தட்டி பாராட்டி வருகின்றனர்!!

Last Updated : Mar 22, 2020, 06:25 PM IST
கை தட்டல், மணி சப்தம் மூலம் கொரோனா வைரஸ் போராளிகளுக்கு நன்றி தெரிவித்த இந்தியா..! title=

தன்னலம் கருதாமால் உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களை கெளரவிக்கும் வகையில், அரசியல் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கைத்தட்டி பாராட்டி வருகின்றனர்!!

நாடு முழுவதும் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் இன்று (மார்ச்-22) மாலை 5 மணி அளவில் அவரவர் வீடுகளின் முன்பாக சேவை செய்யும் மருத்துவர்களுக்கு கை தட்டல், மணி சப்தம் மூலம் நன்றி தெரிவித்தனர். மேலும், பலரும் வீதிகளிலும், மொட்டை மாடிகளிலும் நின்ற படி கை தட்டினர், மணி ஒலித்தனர். 

கொரோனாவை பரவ விடாமல் தடுக்கவும், மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தவும் பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கால் இன்று நாடு முழுவதும் பெரும் அமைதி ஏற்பட்டது. மக்கள் அனைவரும் தானாகவே முன்வந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், உள்ளிட்ட பெருநகரங்கள் வெறிச்சோடிய நிலையில், காணப்படாது. 

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு பதிலளித்த நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் தங்கள் வீடுகளிலிருந்தும், பால்கனிகளிலிருந்தும் வெளியே வந்து, கைதட்டல், பாத்திரங்களை அடிப்பது மற்றும் மணிகள் ஒலிப்பது கூட சுகாதார அதிகாரிகள் மற்றும் அவசரகால ஊழியர்களுடன் ஒற்றுமையின் அடையாளமாக இருந்தது.  

 

Trending News