இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உலகின் மிக உயரமான ரயில் பாலம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தின் உயரம் சுமார் 141 மீட்டர். தற்போது ஐரோப்பாவில் 139 மீட்டர் உயர ரயில்பாதை உள்ளது, இது உலகின் மிக உயரமான பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவில் உயரமான ரயில் பாலம் கட்டப்பட்டவுடன், உலகின் மிக உயரமான பாலம் என்ற பெருமையை இந்தியா பெற்றுவிடும்.
உண்மையில், வடகிழக்கு மாநிலங்களை பொருத்த வரை அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் இரயில் மூலம் இணைக்கப்பட்டு உள்ளன. ஆனால் மணிப்பூர், மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் ரயில் விரிவாக்கம் அதிக அளவில் இல்லை.
எனவே இந்த ஐந்து மாநிலங்களின் தலைநகரங்களை இரயில் மூலம் இணைப்பதற்காக ஜிராபம்-துப்புல்-இம்பால் இடையே ஒரு புதிய பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக மணிப்பூர் மாநிலத்தில் 141 மீட்டர் உயரமான ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் நீளம் 703 மீட்டர் ஆகும். இந்த பாதையில் மொத்தம் 45 சுரங்கங்கள் அமைக்கப்படும். இதன் கட்டுமானம் 2022 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுக்குறித்து ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், "வடகிழக்கு மாநிலங்களை இணைக்கவும் மற்றும் மேம்படுத்தவும் உலகின் மிக உயரமான ரயில் பாலம் கட்டுமானம் தொடர்கிறது, இது மணிப்பூர், மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு எளிதாக பயணிக்க முடியும். இந்த பாலமானது வடகிழக்குப் பகுதியில் புதிய வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் எனக்கூறியுள்ளார்.
पूर्वोत्तर भारत में कनैक्टिविटी और विकास के लिये विश्व के सबसे ऊंचे पुल का निर्माण जारी है, इससे मणिपुर, मिजोरम, मेघालय, सिक्किम और नागालैंड तक की यात्रा आसान होगी, साथ ही यह पुल पूर्वोत्तर में विकास और समृद्धि के नये द्वार खोलेगा। https://t.co/LOQFtfFIfs pic.twitter.com/XFUVSR8Lbh
— Piyush Goyal (@PiyushGoyal) February 6, 2019