உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்!!

Last Updated : Mar 22, 2017, 11:06 AM IST
உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்!! title=

கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று உலக த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது.

கடந்த 1993-ம் ஆண்டு முதல், மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2040-ம் ஆண்டில், உலகில் 4-ல் 1 குழந்தை தண்ணீர் பற்றாக்குறையில் இருக்கும் என்று யுனிசெஃப் கூறியுள்ளது. குறிப்பாக, இன்னும் இருபது ஆண்டுகளில் உலகில், 60 கோடி மக்களுக்கு கடும் தண்ணீர்ப் பிரச்னை ஏற்படும் என்றும் யுனிசெஃப் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் 36 நாடுகளில், தீவிரமான தண்ணீர்ப் பிரச்னை நிலவிவருகிறது. முக்கியமாக, இந்தியக் கிராமப்புறங்களில் வசிக்கும் 6 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

Trending News