#IPL 2018: சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு!

ஐபிஎல் 11-வது சீசன் டி20 தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது! 

Last Updated : May 27, 2018, 09:11 PM IST
#IPL 2018: சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு! title=

21:08 27-05-2018
ஐபிஎல் 11-வது சீசன் டி20 தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது! 

இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 26 ரன்களும், வில்லியம்சன் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 179 என்ற வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறக்கவுள்ளது. 


ஐபிஎல் 11-வது சீசன் டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றனர். 

இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி ஐதராபாத் அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது. 

சென்னை அணியின் சார்பில், ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ‌ஷர்துல் தாகூர், நிகிடி. ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அதேபோன்று, ஜதராபாத் அணியின் சார்பில், ஷிகர் தவான், விருத்திமான் சஹா, வில்லியம்சன் (கேப்டன்), தீபக் ஹூடா அல்லது மனிஷ் பாண்டே, ‌ஷகிப் அல்–ஹசன், யூசுப் பதான், கார்லஸ் பிராத்வெய்ட், புவனேஷ்வர்குமார், ரஷித்கான், சித்தார்த் கவுல், சந்தீப் ‌ஷர்மா அல்லது கலீல் அகமது ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இவ்விரண்டு அணிகளும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர். முந்தைய 3 போட்டிகளில் சென்னையிடம் பெற்ற தோல்விக்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற ஐதராபாத் அணி தீவிரமாக உள்ளது. 

அதேபோல், சென்னை அணி முந்தைய போட்டிகளில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதை போல இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. சென்னை அணி இதுவரை 6 முறை இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்று 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐதராபத் அணி இதுவரை 1 முறை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று அந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News