IPL 2018 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் Kolkata Knight Riders மற்றும் Royal Challengers Bangalore அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற Kolkata Knight Riders முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்த Royal Challengers Bangalore அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் Kolkata Knight Riders அணி களமிறங்கியது. விருவிருப்பாக துவங்கிய ஆட்டத்தினில் Kolkata Knight Riders அணி 2வது ஒவரில் கிறிஸ் லின் 5 ரன்களில் அவுட்டானார். அடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.
சுனில் நரேன் தனது அதிரடியை ஆரம்பித்தார். அவர் 19 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து நிதிஷ் ரானா இறங்கினார். உத்தப்பா 12 ரன்களில் வெலியேறினார். நிதிஷ் ரானாவும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து நிதானமாக ஆடினர். இருவரும் 55 ரன் ஜோடி சேர்த்த நிலையில், நிதிஷ் ரானா 34 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரிங்கு 6 ரன்னில் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் 9 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதனால் Kolkata Knight Riders அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.