கடந்த 10 வருடமாக நடந்து வரும் ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக துவங்கியது.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்கியது.
இதை தொடர்ந்து, தமிழகமே காவிரி விவகாரத்தில் போர்களமாய் திகழும் நிலையில் ஐ.பி.எல் போட்டிக்கு தடை விதிக்க கூறி உயர்நீதி மன்றத்தில் நானு தாக்கல் செய்தனர். ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பானது வலுபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கருப்பு சட்டை அணிந்து செல்லவும் கருப்பு கோடி காட்டவும் என கூறி இருந்தார்.
இதையடுத்து, சென்னையில் நாளை (ஏப்ரல்-10) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல் 20-20 போட்டிதிட்டமிட்டபடி நடக்கும் என ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கிரிக்கெட் போட்டிகளை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை போட்டிக்கு, 2,000 போலீசார் படையினர் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி ஐ.பி.எல்-க்கு கறுப்பு சட்டை அணிந்து வரும் ரசிகர்களுக்கு சென்னை ஐ.பி.எல் போட்டியைக் காண அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மைதானத்தில் ஏராளமான ரகசிய கேமரா-க்களும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.