16:15 05-05-2018
வெளிமாநிலத்தில் நீட் மையம் ஒதுக்குவதை சிபிஎஸ்இ முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
It's very bad that CBSE did not provide any information to the students appearing in the NEET exams that they have to appear outside the state, even though there are 5,000 students from Tamil Nadu. Govt has announced financial assistance for them: #TamilNadu Minister D Jayakumar pic.twitter.com/hVa0ZMpykD
— ANI (@ANI) May 5, 2018
14:01 05-05-2018
வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் வழங்க ஏற்பாடு என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் கூறினார்.
வரும் 7-ம் தேதி நாடு முழுதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருப்பவர்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை வெளி மாநிலங்களில் சென்று தேர்வு எழுத வேண்டும் என அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
இதையடுத்து, நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்திற்க்கு செல்லும் தமிழக மாணவ-மாணவிகளுக்கு பலர் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சில ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நாகர்கோவில் - மங்களூரு ரயில் வழக்கமாக அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் நாளை அதிகாலை 2 மணிக்கு புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மற்ற நாட்களில் இந்த ரயில் 3.30க்கு புறப்படும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 6.45 க்கு எர்ணாகுளம் சென்றடையும். இது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.