கிராம பஞ்சாயத் அமைக்காத அரைசை கண்டித்து கர்நாட்டக மக்கள், நடைப்பெற்று வரும் சட்டமன்ற தேர்தலினை புறகணித்து வருகின்றனர்!
கர்நாட்டக மாநிலம் குல்பர்கா மாவட்டதினை சேர்ந்த சித்தாப்பூர் தாலுக்கா தர்காஸ்பெட் கிராம மக்கள் கிராம பஞ்சாயத் அமைக்க கோரி பல நாட்களாக முற்பட்டு வருகின்றனர். இந்த கோரிக்கை இதுவரை நிரைவேறாத நிலையில் இன்று நடைப்பெற்று வரும் சட்டமன்ற தேர்தலினை அக்கிராம மக்கள் புறகனித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் அதிக வாக்காளர் கொண்ட பகுதியாக இக்கிராமம் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 3500 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Majority of the 3500 residents of Chittapur taluk's Tarkaspet village in Kalburagi district are boycotting #KarnatakaElections2018 over their demand for Gram Panchayat headquarters for their village. pic.twitter.com/Mg3hIKtnbK
— ANI (@ANI) May 12, 2018
#KarnatakaElection2018...
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று 7 மணி அளவில் தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியில் பங்குபெறும் நோக்கில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி செயல்படுவதால், கர்நாடக தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 4.98 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் சுமார் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் சுமார் 2.44 கோடி ஆகும். மொத்தம் 4,552 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலை ஒட்டி மாநிலம் முழுக்க 55,600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 3.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
செல்போன் ஆப் மூலம் எந்த வாக்குசாவடியில் கூட்டம் அதிகம் உள்ளது என்பதை அறியவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு 222 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள இரண்டு தொகுதிக்கும் வரும் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்து விட்டதாலும், ஆர்.ஆர். நகர் தொகுதியில் பத்தாயிரம் வாக்களர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டி 222 தொகுதிகளுக்கான கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தகவலின் படி, இதுவரை 56% வாக்குகள் பதிவாகியுள்ளது!