கத்துவா கற்பழிப்பு வழக்கு: வழக்கறிஞர்க்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு!

ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கும், வழக்கில் ஆஜரான வழக்குரைஞருக்கும் உரிய பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது

Last Updated : Apr 16, 2018, 03:59 PM IST
கத்துவா கற்பழிப்பு வழக்கு: வழக்கறிஞர்க்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு!  title=

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமிக்கு  மயக்க மருத்து கொடுத்து அறையினுள் அடைத்து வைத்து 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.

இந்த, கொடூர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதி சிறுமியின் கொலை வழக்கில் வாதாடும் பெண் வழக்குரைஞர் தீபிகா சிங் ராஜவத், தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தெரிவித்திருந்தனர். இது குறித்து சுப்ரிம் கோர்ட்டில் முறையீடு செய்யப் போகிறேன் எனவும் நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது, ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கும், வழக்கில் ஆஜரான வழக்குரைஞருக்கும் உரிய பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமி வழக்கை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சண்டிகருக்கு மாற்ற கோரிய சிறுமியின் தந்தை தொடுத்த வழக்கை ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! 

Trending News