Tricks To Solve All Your Problems With A Smile : இவ்வுலகில் பிரச்சனை இல்லாத மனிதர் என்பவர் யாருமே இல்லை. குழந்தையில் இருந்து, நன்கு வளர்ந்த பெரியவர்கள் வரை, அனைவருக்குமே தலைக்கு மேல் அத்தனை பிரச்சனை இருக்கிறது. ஆனால், இவற்றை ஒவ்வொருவர் கையாளும் முறை வெவ்வேறாக இருக்கும். ஒரு சிலர், தன்னை நோக்கி வரும் பிரச்சனைகளை புலம்பிக்கொண்டே எதிர்கொண்டால், இன்னும் சிலர் அதனை சிரித்துக்கொண்டே கையாளர்வர். ஆனால், புலம்புபவரை விட, பெரிதாக ரியாக்ட் செய்யாமல் பிரச்சனைகளை சமாளிப்பவர்கள் அதனை நன்றாகவே எதிர்கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவர்களுள், நீங்களும் ஒருவராக வேண்டும் என்று நினைத்தால், அதற்கான ட்ரிகஸை இங்க கத்துக்கோங்க.
உங்கள் பார்வையை மாற்றுங்கள்:
உங்களை நோக்கி ஒரு பிரச்சனை வரும் போது, அதை உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். அவை உங்களுக்கு வாழ்வில் வந்திருக்கும் தடையா அல்லது நீங்கள் ஏறும் படியா என்பது, அதை கையாளும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. எனவே, உங்களை நோக்கி வரும் முட்டுக்கட்டைகளை மோட்டிவேஷனாக மாற்றி முன்னேற வேண்டும். இந்த கடினமான சூழலை கொஞ்ச நாளில் கடந்து விடலாம் என மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
நன்றியறிதல்:
உங்கள் வாழ்வில் இருக்கும் பாசிடிவான விஷயங்களை நினைத்து பார்க்க வேண்டும். அது, மிகவும் சிறிய விஷயமாக கூட இருக்கலாம். நாகேஷ் ஒரு படத்தில், “கல்லை கண்ணுக்கு கிட்ட வெச்சி பார்த்தா அது பெருசாதான் தெரியும். கொஞ்சம் தள்ளி வெச்சு பாரு..அது கடுகு சைஸ்ல தெரியும்” என்பார். இதை நீங்களும் ஃபாலோ பண்ணலாம். இப்போது பெரிய பிரச்சனையாக தோன்றும் அந்த விஷயம், இன்னும் சில காலத்தில் நீங்கள் எளிதாக கடந்து செல்வதாக மாறிவிடும்.
நிகழ்காலத்தில் இருத்தல்:
எதிர்காலத்தை நினைத்து கவலை படுவதாலோ, பழையதை நினைத்து கலங்குவதாலோ, உங்களது தற்போதைய நிகழ் காலம் மாறிவிடாது. எனவே, இப்போது உங்கள் கைகளில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.
தீர்வுகள்:
பிரச்சனைகளுக்கு பதிலாக இருப்பது, தீர்வுகள் மட்டுமே. எனவே, உங்கள் மனதை மிகவும் வாட்டி வதைத்து பிரச்சனைகளை பற்றி மட்டும் யோசிக்காமல் அதற்கு எந்த மாதிரியான தீர்வுகள் சரியானதாக இருக்கும் என்பது குறித்தும் நீங்கள் யோசிக்க வேண்டும். உங்கள் பிரச்சனைகளை முழுதாக தீர்க்க முடியவில்லை என்றால், அதை பாதி பாதியாக தீர்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.
கவலையை மறக்க..கொஞ்சம் நகைச்சுவை:
சில வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்திருக்கும். ஆனால், அந்த பிரச்சனையை இப்போது நினைத்து பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு வரலாம். அதை தீர்த்து பல ஆண்டுகள் ஆன பின்புதான் சிரிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்கள் தவறினால் நீங்கள் ஒரு பிரச்சனைக்குரிய சூழலில் சிக்கியுள்ளீர்கள் என்றாலும் கூட, உங்களை பார்த்து நீங்கள் சிரித்துக்கொள்ளலாம். இது, அந்த பிரச்சனையை குறித்த கவலையை மறக்கவும், மனதை தெளிவுப்படுத்தவும் உதவும்.
மேலும் படிக்க | உடன் வேலை பார்ப்பவரை காதலிப்பதால் ஏற்படும் 5 பிரச்சனைகள்!
உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளுதல்:
உங்கள் உடலுக்கு தேவையான உணவை எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல் ஆகியவை உங்கள் பிரச்சனைகளை சமாளிக்க மனத்தெளிவை கொடுக்கலாம். ஹெல்தியான உடல் இருந்தால், ஆரோக்கியமான மனநிலையும் இருக்கும். எனவே, தினமும் வாழ்வில் என்ன நடந்தாலும், உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாசிடிவான மனிதர்கள்:
“இவரிடம் இதை சொன்னால் கொஞ்சம் மனசு லேசாகும்” என்று நம்மை நினைக்க வைக்கும் வகையில் யாரேனும் ஒருவர் இருப்பார். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பவராக அவர் இல்லை என்றாலும், நீங்கள் அவருக்கு போன் செய்து பேசலாம். இதனால், உங்கள் மனதில் இருக்கும் குழப்பமும் கொஞ்சம் விலகும். அவர்கள் பாசிடிவான மனிதராக இருப்பதால், அந்த ஆற்றல் உங்களுக்கும் ஒட்டிக்கொள்ளும்.
மேலும் படிக்க | உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுகிறீர்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ