ரயில்வே கழிவறை சுவர் இடிந்து விபத்து; முதியவர் பரிதாப பலி!

பாட்னா ரயில்வே நிலையத்தில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 70 வயது முதிவர் பலியாகியுள்ளார்!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Aug 7, 2018, 12:43 PM IST
ரயில்வே கழிவறை சுவர் இடிந்து விபத்து; முதியவர் பரிதாப பலி!
Pic Courtesy: twitter/@ANI

பிஹார்: பாட்னா ரயில்வே நிலையத்தில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 70 வயது முதிவர் பலியாகியுள்ளார்!

பாட்னா ரயில்வே நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறையில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிஹார் மாநில முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சுவர் இடிப்பாட்டின் போது எழுந்த ஒலி கேட்டு அருகில் இருந்த ரயில்வே ஊழியர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்த முதியவரை மீட்க விரைந்து சென்றனர். எனினும் இடிபாடுகளில் இருந்து அவரது சடலம் மட்டுமே மீட்கப்பட்டது.

இந்த விபத்தில் பலியானவர் இரண்டாம் தர AC பெட்டியில் பயணிக்க காத்திருந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரது பயண சீட்டு தகவல்கள் கொண்டு பலியான முதியவரின் குடும்பத்தாருக்கு முதியவரின் நிலை குறித்து தகவல் தெரிவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த விபத்துகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.