இளம் பெண்களின் மார்பக வளர்ச்சியை தடுக்க கொடூர முறையை கையாளும் தாய்மார்கள்...

வளர் இளம் பெண்களின் மார்பகங்கள் வேகமாக வளர்வதை தடுக்க, அவர்களின் மார்பகங்களில் சூடான கல்லை வைத்து தேய்க்கும் கொடூர பழக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது......

Updated: Jan 28, 2019, 05:16 PM IST
இளம் பெண்களின் மார்பக வளர்ச்சியை தடுக்க கொடூர முறையை கையாளும் தாய்மார்கள்...
Representational Image

வளர் இளம் பெண்களின் மார்பகங்கள் வேகமாக வளர்வதை தடுக்க, அவர்களின் மார்பகங்களில் சூடான கல்லை வைத்து தேய்க்கும் கொடூர பழக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது......

இந்த பறந்து விரிந்த உலகில் எங்குபார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற நிறைய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குழந்தையை கூட விட்டு வைக்காமல் அவர்களையும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கும் காம கொடூரர்கள் ஒரு புறம் இருக்கின்றனர். 

தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தை ஒரு வீட்டில் பிறந்தாலே அவரது பெற்றோர்கள் தங்களது வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் அந்த குழந்தையை வளர்கின்றனர். இந்நிலையில், பிரிட்டனில் தங்களின் குழந்தைகளை பாலியல் தொல்லையில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்காக பெற்றோர்கள் செய்யும் சில வழிமுறை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் அளவிற்கு ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. 

ஆப்பிரிக்க நாடுகளில், சிறுமிகள் பலாத்காரத்திற்கு ஆளாகாமல் தடுக்கவும், ஆண்களின் காமப் பார்வை அவர்கள் மீது படாமல்  இருக்கவும், தங்கள் மகள்களுக்கு, அவர்களின் தாய்மார்களே, மார்பகங்களை சிதைக்கும் கொடூர பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில், உலகளாவிய பெண்கள் நல அமைப்புகள், உலக சுகாதார நிறுவனம், குழந்தைகள் நலனுக்காக செயல்படும் பல்வேறு அமைப்புகள் போன்றவை இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இது போன்ற செயல்பாடுகளை ஒழிக்க பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களையும் மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கை, பெண்களுக்கு எதிரான வன்முறையாக, ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்பறிவு அதிகம் உள்ளோர் வசிக்கும், ஒரு காலத்தில் உலக நாடுகளை கட்டி ஆண்ட நாடான, பிரிட்டனிலும் இந்த கொடூர பழக்கம் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து, பிரிட்டனை சேர்ந்த பெண்கள் நல அமைப்பினர் கூறுகையில், ‛‛இந்த காலத்தில் சிறுமிகள் மிகவும் சிறு வயதிலேயே பூப்படைந்துவிடுகின்றனர். அவர்களின் மார்பக வளர்ச்சி வேகமாகவும், அதீதமாகவும் உள்ளது.

இதனால், காமப் பசியுடன் அலையும் ஆண்களின் பார்வையில் சிக்கி, அவர்கள் கற்பை இழக்க நேரிடுகிறது. எனவே, குறிப்பிட்ட வயது வரை, வளர் இளம் பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சியை தடுக்க, அவர்களின் மார்பகங்களில் சூடு வைக்கப்படுகிறது. 

அதாவது, சூடான கற்கள் அல்லது இரும்பு பொருட்களை வைத்து, துணிகள் உதவியுடன், சிறுமிகளின் மார்பகங்களில் மசாஜ் செய்கின்றனர். இதனால், மார்பக திசுக்கள் அழிந்து, அதன் வளர்ச்சி வேகம் குறைக்கப்படுகிறது. இந்த கொடூர செயலை, அந்த சிறுமியின் தாய்மார்கள், அத்தை, சித்தி, பெரியம்மா, பாட்டி உள்ளிட்ட உறவினரே செய்கின்றனர். முதன் முதலில் இந்த கொடூர பழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் காணப்பட்டது. தற்போது, இந்த பழக்கம் பிரிட்டனிலும் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. 

இது போன்ற நடவடிக்கையால் பெண் குழந்தைகளின் மார்பக வளர்ச்சி தடைபட்டு, அவர்கள் தாய் பால் தருவதில் சிக்கல் ஏற்படும். மார்பக புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ள எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, யாரும் காவல்துறையில் புகார் அளிக்க முன் வராததால், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது’’ என அவர்கள் கூறினர்.