புதுடெல்லி: நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் போரில், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தினமும் புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன. டேட்டாவைத் தவிர, நுகர்வோரை தக்கவைப்பதற்கு, ரிலையன்ஸ் ஜியோ (R-Jio), ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா (Vodafone-Idea) ஆகியவை தங்கள் பயனர்களுக்கு OTT சேவைகளை இலவசமாக வழங்குகின்றன.
ALSO READ: LIC ஜீவன் ஷாந்தி பாலிசி: பல நன்மைகளைக் கொண்டுள்ள ஒரு அற்புதத் திட்டம்!!
இதை மனதில் வைத்து, Airtel இப்போது இரண்டு புதிய Pre Paid திட்டங்களை (Prepaid Plans) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு Disney + Hotstar VIP-ன் ஒரு வருடத்திற்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது. Disney + Hotstar VIP-ன் ஒரு வருட சந்தா ரூ .399 க்கு வருகிறது. ஏர்டெல்லின் இந்த இரண்டு திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ரூ 599 திட்டம்
Airtel-ன் ரூ .599 -ன் இந்த திட்டத்தில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் unlimited calling கிடைக்கும். இது தவிர, தினமும் 2GB Data மற்றும் 100 SMS-ம் கிடைக்கும். இதனுடன் Airtel Thanks-ன் வசதிகளும் கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு வருடத்திற்கு Disney + Hotstar VIP-ன் சந்தாவை இலவசமாகப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்களாகும்.
ரூ 448 திட்டம்
ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் தினமும் 3 GB தரவு கிடைக்கும். இந்தத் திட்டத்திலும், முந்தைய திட்டத்தைப் போலவே, unlimited calling-குடன் தினமும் 100 எஸ்எம்எஸ்-சுக்கான வசதியும் கிடைக்கும். இதிலும் Airtel Thanks-ன் அனைத்து வசதிகளையும் பெறலாம். ஆனால் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்களாகும்.
74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏர்டெல் தனது Airtel Xstream Fiber பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி தரவை இலவசமாக வழங்குவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. ஆனால் இந்த சலுகை புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.
ALSO READ: Airtel வழங்கும் அதிரடி சுதந்திர தின Offers: 1000GB Free…இன்னும் நிறைய இருக்கு!!