புதுடெல்லி: நீங்கள் ஓய்வூதியம் பெறுபவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயன்படும். அதன்படி நவம்பர் மாதம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்த முக்கிய வேலைகளை உடனடியாக முடிக்கவும். இவற்றை சரியான நேரத்தில் செய்யாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்தப் வேலையை முடிக்கவும்
பல முக்கியமான விஷயங்களை செய்து முடிக்க நவம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எடுத்துக்காட்டாக, ஓய்வூதியம் பெறுவோர் (Pensioner) நவம்பர் 30ஆம் தேதிக்குள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இது தவிர, இதுபோன்ற பல பணிகள் உள்ளன, அவற்றை நீங்கள் நவம்பர் 30 க்கு முன் நிறைவு செய்ய வேண்டும். இந்த மாத இறுதிக்குள் நீங்கள் முடிக்க வேண்டிய சில முக்கிய வேலைகளின் விவரத்தை இங்கே காண்போம்.
ALSO READ | LIC Best Saving Plans: இந்த ஒரே பாலிசியில் பல நன்மைகள் -முழு விவரம்
வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கவும்
ஓய்வூதியம் பெறுவோர் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது மிகவும் அவசியம். நீங்களும் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால், கடைசி தேதிக்கு முன் உங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். உண்மையில், ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் இந்த ஆயுள் சான்றிதழ். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.
LIC ஹவுசிங் ஃபைனான்ஸில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்
நீங்கள் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால், எல்ஐசி (LIFE INSURANCE CORPORATION OF INDIA) ஹவுசிங் ஃபைனான்ஸின் சிறப்பு வீட்டுக் கடன் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த சிறப்புச் சலுகையின் கீழ், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கான கடன் விகிதத்தை 6.66 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதாவது, இந்த வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டியைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் சலுகைக்கான கடைசித் தேதி நவம்பர் 30 மற்றும் இது வீட்டுக் கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். இதற்குப் பிறகு நிறுவனம் வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம்.
ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் சேர்க்கைக்கு பதிவு செய்யவும்
ஜவஹர் நவோதயா வித்யாலயாவின் 9ஆம் வகுப்பில் சேர்க்கைக்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 30 ஏப்ரல் 2022 அன்று நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். இந்த தேதி வரை, நவோதயா வித்யாலயா சமிதியின் அதிகாரப்பூர்வ இணையதளமான navodaya.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விரிவான தகவல்களுக்கு இந்த இணையதளத்தையும் பார்வையிடலாம்.
ALSO READ | EPFO: பணியில் இருந்து விலகிய பின் PF இல் வட்டி எவ்வளவு காலம் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR