புதுடெல்லி: அமேசான் தனது பிரைம் நவ் டெலிவரி செயலியை நீக்கியுள்ளது. இது அமேசான் நிறுவனத்தின் மளிகை விநியோக தளமாகும். Amazon Prime Now அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான (Amazon Prime Members) தனிப்ப்ட்ட செயலியாகும். ஆனால் இப்போது நிறுவனம் அதை நீக்கியுள்ளது. பிரைம் நவ் (Prime Now) 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இப்போது சேவை எதில் கிடைக்கும்
நிறுவனத்தின் இரண்டு மணி நேர டெலிவரி விருப்பம் இப்போது அமேசானின் பிரதான செயலி மற்றும் இணையதளத்தில் கிடைக்கும். பிரைம் நவ் ஏற்கனவே இந்தியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் அமேசான் செயலிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பிரைம் நவ் செயலி மற்றும் வலைத்தளம் நீக்கப்பட்டுள்ளது. பிரைம் நவ் முதன்முதலில் 2014 இல் நியூயார்க்கில் தொடங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், அமேசான் நவ் என்ற பெயரில் மற்ற சந்தைகளில் இது தொடங்கப்பட்டது. இருப்பினும், இது பின்னர் பிரைம் நவ் என மாற்றப்பட்டது.
ALSO READ | BSNL வழங்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டம்; கட்டணம் ₹47 மட்டுமே
எல்லா சேவைகளும் ஒரே செயலியில் கிடைக்கும்
ஷாப்பிங், ஆர்டர்கள் பற்றிய தகவல்களை பெறுதல் மற்றும் கஸ்டமர் புகார் அளிக்கவும், அவர்களளுக்கு உதவவும், கஸ்டமர்கள் தொடர்புகொள்ளவும் (Customer Care ), என அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அமேசானில் மளிகைத் துறையின் (Amazon Grocery) துணைத் தலைவர் ஸ்டீபன் லாண்ட்ரி (Stephen Landry ) கூறுகையில், தினசரி பயன்பாட்டிற்கான பொருட்கள், பரிசுகள், பொம்மைகள், பிரைம் நவ் போன்றவற்றில் காணப்படும் உயர்தர மளிகைப் பொருட்கள் போன்றவை அமேசானிலும் கிடைக்கும் என்றார்.
Amazon Fresh
அமேசான் ஃப்ரெஷ் (Amazon Fresh) என்பது நிறுவனத்தின் முக்கிய செயலில் இருக்கும் மளிகைக் கடை. அமேசான் ஃப்ரெஷ் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. இது வரை அதன் சேவை பெங்களூருக்கு மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது டெல்லி-என்.சி.ஆர், மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற மேலும் 6 நகரங்களிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ALSO READ | கொரோனா கால சாதனை; அமேசான் இந்தியா மூலம் 300 கோடி டாலர் மதிப்பிலான ஏற்றுமதி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR