Mukesh Ambani Favourite Food | தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது எளிமைக்கு பெயர் பெற்றவர். ஆசியாவின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தாலும், அவரது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கம் மிகவும் எளிமையானது. முகேஷ் அம்பானி தனது உணவுப் பழக்கத்தில் மிகவும் ஒழுக்கமானவர். அவர் எப்போதும் ஆரோக்கியமாக வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறார். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் சாப்பிடுவார். முகேஷ் அம்பானிக்கு அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படும் குஜராத்தி சிற்றுண்டி பாங்கி மிகவும் பிடிக்குமாம். இதனை அவரது மனைவி நீதா அம்பானி அண்மையில் கூறியிருந்தார்.
முகேஷ் அம்பானி குஜராத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு குஜராத்தி உணவுகள் மிகவும் பிடிக்கும். சில காலத்திற்கு முன்பு, முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி வாரணாசிக்கு சென்றிருந்தார். அங்கு அவர் உள்ளூர் மக்களுடன் உரையாடினார். அப்போது தனது கணவர் முகேஷ் அம்பானி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் விருப்பமான சிற்றுண்டிகளை வெளிப்படையாக பேசினார்.
தனது கணவர் முகேஷ் அம்பானி தனது உணவில் மிகவும் கண்டிப்பானவர் என்று அவர் கூறியிருந்தார். முகேஷ் ஆரோக்கியமான வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் சாப்பிடுவார் எனவும், முகேஷ் அம்பானிக்கு அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படும் குஜராத்தி சிற்றுண்டி பாங்கி பிடிக்கும் என்றும் நீதா அம்பானி தெரிவித்தார்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?
பாங்கி ஏன் ஆரோக்கியமானது?
வாழை இலையில் பாங்கி தயாரிக்கப்படுவதால், இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உணவில் கலக்கின்றன. பாங்கியில் அரிசி மாவு இருப்பதால் மாவுச்சத்து சேர்க்கப்படுகிறது. தவிர, வெந்தயம் மற்றும் பிற மசாலாப் பொருட்களால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இதில் உள்ளன. இது குறைந்த நெய் மற்றும் எண்ணெயில் செய்யப்படுவதால், இது குறைந்த கொழுப்பு கொண்ட சிற்றுண்டி உணவாகும். பசையம் பிரச்சனை உள்ளவர்களும் பாங்கி சாப்பிட பயப்படத் தேவையில்லை, ஏனெனில் இது அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசி பசையம் இல்லாதது. இதில் நார்ச்சத்து குறைவாக இருந்தாலும், வெந்தயத்தில் உள்ளதால் நார்ச்சத்தும் அதிகரித்து செரிமானத்தை எளிதாக்குகிறது.
எடை இழப்புக்கும் உதவி
குறைந்த கொழுப்பு, குறைந்த கலோரி மற்றும் பசையம் இல்லாததால், பாங்கியை உங்கள் வெயிட் லாஸ் டையட்டின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளலாம். இதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு, எனவே இது எல்லா வகையிலும் ஆரோக்கியமான உணவு.
மேலும் படிக்க | முட்டை பச்சையாக உடைத்து சாப்பிடக்கூடாது... விபரீத சிக்கல் - என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ