PF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோ

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO ​​விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 15, 2024, 03:37 PM IST
  • PF கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கான விதிகள்
  • புதிய விதிகள் எப்போது அமலுக்கு வரும்?
  • உறுப்பினர்கள் வட்டி இழப்பு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு குறைவு.
PF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோ title=

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO ​​விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 நவம்பர் 2024 அன்று நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் பிஎஃப் கிளைம் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம். 

PF கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கான விதிகள்

EPF உறுப்பினர், பொதுவாக, ஓய்வு பெற்ற பிறகு பணத்தை எடுக்கும் பழக்கம் உள்ளது என்றாலும், குறிப்பிட்ட சில தேவைகளுக்காக, PF பணத்தில் இருந்து ஓரளவு பணத்தை திரும்பப் பெறலாம். வீடு கட்ட, மனை வாங்க, வீடு வாங்க, மருத்துவ சிகிச்சை, வீட்டுப் பராமரிப்பு, திருமண செலவு ஆகியவற்றுக்காக, பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். இந்நிலையில், இது தொடர்பாக ஏற்பட்டுள்ள விதிகள் மாற்றப்பட்டிருப்பது குறித்து உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டும். 

க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டி

EPFO புதிய விதிகளின் படி, EPF உறுப்பினர்கள் தங்கள் க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டியைப் பெறுவார்கள். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், 1952 EPF திட்டத்தின் 60(2)(b) பத்தியில் குறிப்பிடத்தக்க திருத்தங்களை மத்திய அறங்காவலர் குழு CBT அங்கீகரித்துள்ளது. முந்தைய விதிகளின்படி, க்ளெய்ம் ஒரு மாதத்தின் 24ம் தேதிக்குள் அனுமதிக்கப்பட்டால், முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி வழங்கப்பட்டது. இப்போது, ​​​​உறுப்பினர்கள் க்ளெய்ம் தீர்வு தேதி வரை வட்டியைப் பெறுவார்கள். இது அவர்களுக்கு அதிக நிதி நன்மைகளை வழங்கும் மற்றும் க்ளைய்ம் அங்கீகரிக்கும் செயல்முறையும் துரிதமாக இருக்கும். 

மேலும் படிக்க | PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்க... டெபிட் கார்ட் போதுமா? தனி கார்ட் வருமா? புதிய அப்டேட்

PF கூடுதல் வட்டி நன்மைகள்

EPF உறுப்பினருக்கு ரூ.10 லட்சம் இருப்பு உள்ளது என்றும், ஆண்டு வட்டி விகிதம் 8.25% என்றும் வைத்துக்கொள்வோம். க்ளெய்ம் ஒரு மாதத்தில் 20ம் தேதி அன்று செட்டில் செய்யப்பட்டால், க்ளைய்ம் செய்த தொகைக்கான வட்டி முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி கணக்கிடப்பட்டு வந்த நிலையில். இப்போது, ​​புதிய விதியின் கீழ் க்ளெய்ம் தேதி வரை வட்டி கணக்கிடப்படும்.

பழைய கணக்கீட்டு முறையில் வட்டி முந்தைய மாத இறுதி வரை கணக்கிடப்படுகிறது

20ஆம் தேதியன்று க்ளெய்ம் செட்டில் ஆகிவிடுவதால், அந்த க்ளைம் செட்டில் செய்யப்பட்ட மாதத்துக்கு வட்டி இருக்காது. EPF உறுப்பினருக்கு முந்தைய மாதத்திற்கான மாதாந்திர வட்டி கிடைக்கும். வட்டி பின்வருமாறு கணக்கிடப்படும்.

EPF இருப்புக்கான மாதாந்திர வட்டி = ரூ 10 லட்சம் X (8.25%/12) = ரூ 6,875

புதிய கணக்கீட்டு விதியின் கீழ் EPF க்ளெய்ம் தேதி வரை வட்டி கணக்கிடப்படுகிறது

புதிய EPF விதிகளின் படி, செட்டில்மென்ட் தேதி வரை வட்டியை கோர அனுமதிக்கிறது. EPF கணக்கிற்கான வட்டி பின்வருமாறு கணக்கிடப்படும்.

மாத வட்டி = ரூ 10 லட்சம் X (8.25% / 12) = ரூ 6,875

20 நாட்களுக்கு வட்டி = (ரூ 6,875 / 30) X 20 = ரூ 4,583

எனவே, புதிய விதிகளின்படி, EPF உறுப்பினர் ரூ.4,583 கூடுதல் வட்டியைப் பெறுவார்.

புதிய விதிகள் எப்போது அமலுக்கு வரும்?

புதிய விதிகளை அமல்படுத்த எந்த அதிகாரியும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும், அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரும் வரை, பழைய விதிகளில்தான் க்ளெய்ம் செயல்படுத்தப்படும்.

புதிய விதியின் மூலம் கிடைக்கும் பலன்கள்

1. நிதிப் பலன்கள் அதிகரிப்பு: EPF உறுப்பினர் க்ளைம் செட்டில்மென்ட் வரை முழு காலத்திற்கும் வட்டியைப் பெறுவார். இதன் விளைவாக வட்டி வருமானம் அதிகம் கிடைக்கும்.

2. புகார்களில் குறைப்பு: வட்டி கணக்கீடுகளில் உள்ள வேறுபாடுகளை நீக்குவதன் மூலம், உறுப்பினர்கள் வட்டி இழப்பு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு குறைவு.

3. துரிதமான செயல்முறை: புதிய விதிகளை அமல்படுத்திய பிறகு, பிஎஃப் க்ளைய்ம் கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் தீர்க்கலாம்., இது உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

4. உகந்த வள பயன்பாடு: EPFO ​​தங்களிடம் பிஎஃப் உறு[ப்பினர்கள் வைக்கும் க்ளெய்ம் விண்ணப்பங்களை மிகவும் திறமையாகச் செயல்படுத்த முடியும், இது சிறந்த சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ் 
 

 

Trending News