ஆனந்த் அம்பானியை வளர்த்ததே இவர் தானாம்; இப்போது இந்த நடிகரின் மகனையும் - மாதச் சம்பளம் இதோ!

Nanny Lalitha Dsilva: ஆனந்த் அம்பானியை சிறுவயதில் பார்த்துக்கொண்ட செவிலி லலிதா டிசில்வா தற்போது பிரபல நடிகரின் குழந்தையையும் கவனித்து வருகிறார். அந்த வகையில், இவரின் மாதச் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 22, 2024, 12:59 PM IST
  • சமீபத்தில் செவிலி லலிதா, ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்றார்.
  • அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
  • பல பிரபலங்களின் பிள்ளைகளையும் அவர் பாராமரித்துள்ளார்.
ஆனந்த் அம்பானியை வளர்த்ததே இவர் தானாம்; இப்போது இந்த நடிகரின் மகனையும் - மாதச் சம்பளம் இதோ! title=

Anant Ambani Childhood Nanny Lalitha Dsilva Monthly Salary: முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் பிரமாண்ட திருமண விழாவும், அதற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகளும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. திருமண கொண்டாட்ட நிகழ்விற்கு பில் கேட்ஸ் தொடங்கி உலகின் பல முன்னணி தொழிலதிபர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்ரனர். திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்வில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பரின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. 

ஜூலை 12ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை மும்பை ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதிலும் பல பிரபலங்கள் விருந்தினர்களாக கலந்துகொண்டர். இருப்பினும், இத்தனை பிரபலங்கள் வந்திருந்தபோதிலும், பிரபலமில்லாத ஒருவர்தான் மணமகன் ஆனந்த் அம்பானிக்கு மனதுக்கு நெருக்கமான விருந்தினராக இருந்திருப்பார் எனலாம்.

சிறுவயது ஆனந்த் அம்பானி உடன்

அவர் வேறு யாரும் இல்லை, ஆனந்த அம்பானியை சிறுவயதில் இருந்து பார்த்துக்கொண்ட கேர் டேக்கரான லலிதா டிசில்வா தான். ஆனந்த் அம்பானியை சிறுவயதில் இருந்து வளர்த்து வந்த லலிதா, அவரின் திருமண நிகழ்வில் பங்கேற்றது குறித்து இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அதன்மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. 

மேலும் படிக்க | நீதா அம்பானியிடம் ரூ.90 கோடி மதிப்பிலான ஆடி கார்... தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன..!!

மேலும் லலிதா டிசில்வா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆனந்த் அம்பானியுடனான தனது அனுபவங்களை நினைவுக்கூர்ந்தார். அதிலும், பாரீஸ் நகரத்தில் உள்ள டிஸ்னி வேல்ர்டில் சிறுவயது ஆனந்த் அம்பானி தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு,"பாரிஸ் டிஸ்னி வேர்ல்டில் இது, நானும் ஆனந்த் அம்பானியும்... அவருடன்தான் எனது குழந்தை பராமரிப்பு பணியை தொடங்கினேன்.

ஆனந்த் அம்பானி திருமணத்தில்...

ஆனந்த் சிறுவயதிலேயே நல்ல பையன். தற்போதும் அவர் குடும்பத்தினராலும், மற்ற அனைவராலும் நேசிக்கப்படுபவராக உள்ளார். இன்று (அவரது திருமண நாள் அன்று) அவருக்கு சிறப்பான நாளாகும், அவருடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், கடவுள் இந்த தம்பதியை ஆசீர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டிருந்தார். 

தொடர்ந்து ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவுக்கு சென்றிருந்த லலிதா டிசில்வா, அங்கு தம்பதியினருடனும், முகேஷ் அம்பானி, நிதா அம்பானி உள்ளிட்ட குடும்பத்தினருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த அவர்,"ஆனந்தும், அம்பானி குடும்பமும் என் வாழ்க்கையில் கொண்டு வந்த மகிழ்ச்சிக்கும் அன்புக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன்.

'அம்பானி குடும்பத்தின் ஓர் அங்கும்'

நாங்கள் பகிர்ந்து கொண்ட இனிமையான நினைவுகள் மற்றும் அன்பான தருணங்களை நான் மிகவும் மதிக்கிறேன். மேலும் அவர்களின் அன்பு மற்றும் மரியாதைக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அவர்களின் பெருந்தன்மை என்னை ஊக்கப்படுத்துகின்றன. என் வாழ்க்கையில் நிதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியை பெற்றதற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். 

அவர்கள் இன்னும் என்னை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக அரவணைத்து வருகின்றனர். ஆனந்த் மற்றும் ராதிகா அபரிமிதமான அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவர்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என குறிப்பிடுகிறார்.

அவரின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

குழந்தைகளுக்கான செவிலியரான லிலதா டிசில்வா, அம்பானி குடும்பத்தாருடன் மட்டுமின்றி பிரபலங்களின் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, கரீனா கபூரின் மூத்த மகன் தைமூர் கபூரையும் இவர்தான் பார்த்துக்கொண்டார். தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் - உபாசானாவின் மகன் க்ளின் காரா கொனிடேலாவை லலிதா தான் பார்த்துக்கொள்கிறார். 

ராம் சரண் - உபாசானா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை ஆவார். எனவே, அவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை லலிதாவிடம் ஒப்படைத்துள்ளனர். இவருக்கு மாதம் 1.15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் கூடுதல் நேரம் அவர் பணியாற்றும் வேளையில் 1.75 லட்சம் வரை மாதச்சம்பளம் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | ஆனந்த் அம்பானி திருமணம்: ரொம்ப சுமாராக ஆடை அணிந்த பிரபலங்கள்... அட இவங்களுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News