என் முன்னாடியே இன்னொருத்திய பாக்குறியா; காதலனை பிரித்தெடுத்த காதலி!!

அருகிலிருந்த பெண்ணைப் பார்த்ததால் காதலனின் தலையை லேப்டாப்பால் உடைத்த காதலி!!

Updated: Jul 28, 2019, 10:55 AM IST
என் முன்னாடியே இன்னொருத்திய பாக்குறியா; காதலனை பிரித்தெடுத்த காதலி!!

அருகிலிருந்த பெண்ணைப் பார்த்ததால் காதலனின் தலையை லேப்டாப்பால் உடைத்த காதலி!!

பொதுவாகவே தனது காதலன் மீது பெண்களுக்கும் அதிக பொசசிவ்நஸ் இருப்பது சகஜம். தன்னை தாவிய யாரையும் பார்க்கக்கூடாது; பேசக்கொடாது என அதிக நிபந்தனைகளை போடுவார்கள். காதல், திருமணம் என ஒருவருடன் கமிட்மெண்டில் இருந்தாலும் மற்ற ஆண், பெண்ணை பார்ப்பது மனித இயல்பு. ஆனால் இதை புரிந்து கொண்டு கடந்து போவோர் சிலர். அதை கோபமாக வெளிப்படுத்துவோர் சிலர். இரண்டாவது ரகம்தான் இந்த விமானத்தில் பயணித்த பெண்.

விமானத்தில் ஒரு காதல் ஜோடி பயணித்துள்ளனர். காதலை கொண்டாட இருவரும் மியாமியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அமெரிக்கன் ஏர் லைன்ஸ் விமானத்தில் சென்றுள்ளனர். அப்போது காதலன் தொடர்ந்து எதிர்புறம் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதை பார்த்த காதலி கோபத்தில் வெகுண்டெழுந்து அனைவரும் கேட்கும் படி கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்.

அவமானம் தாங்க முடியாத காதலன் விமானத்தை விட்டுக் கீழே இறங்க முடிவு செய்து எழுந்து நடக்கும் போது திடீடென தன்னுடைய கையில் இருந்த லேப்டாப்பை எடுத்து விரைந்து சொன்று அவரின் தலையில் ஓங்கி இரண்டு, மூன்று தடவை அடிக்கிறார். இதில் என்னக் கொடுமை என்றால் அந்தக் காதலனின் தலை முடியில்லா வழுக்கைத் தலை. இதனால் அவரின் தலையில் இரத்தக் கசிய காயம் ஏற்பட்டுள்ளது. உடனே விமானப் பெண்கள் அவரை காப்பாற்றி அழைத்துச் செல்கின்றனர்.

அந்த பெண்ணும் தான் எடுத்து வந்த பொட்டிப் பைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிவிட்டார். இந்தக் காட்சிகளை அதே விமானத்தில் பயணித்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். அது தற்போது பட்டிதொட்டி எங்கும் பரவி வைரலாகிக் கொண்டிருக்கிறது.